உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செவ்வாய் தனது பகையான சந்திரனது வீட்டில் (எட்டாம் இடத்தில் மேலாதிக்கம் பெற்றுச் சந்திரன் 7ஆம் வீட்டில் இருந்தால் செவ்வாய்க்கு உரியவர்) அதாவது செவ்வாய் உச்சநிலையில் இருந்த போது பிறந்தவர் பாம்பு கடித்தும் சாவர் எனச் சோதிட நூல் கூறுகின்றது. அதே போன்று புதன் அல்லது வெள்ளி உச்சநிலையில் இருக்கும்போது பிறந்தவர் ஏதாவது ஒருவகை நஞ்சால் மரணம் எய்துவர் எனத் தீர்மானிக்கின்றன சோதிட நூல்கள். கிரகணம் அன்று பாம்பு கடித்தால் அவனை இறைவன்கூடக் காப்பாற்றுவது கடினம் எனச் சித்தராரூடம் கூறும்.

வைத்தியம்

வைத்திய நூல் என்பதற்கும் அனுபவ வைத்தியம் என்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு மருத்துவம் செய்ய வேண்டிய மருத்துவரை நாடும் பொழுது மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நடக்கும் உரையாடலை வைத்து இன்ன நோய் இவருக்கு என்பதனை அவர் அறிந்து கொண்டு அந்நோய்க்கு அம்மருத்துவர் தரும் மருந்தினைத் தெரிந்து கொண்டு. அதே நோய் மற்றொருவருக்கும் வருங்காலத்து இவர் அந்நோயாளிக்கு அறிவுரை தரும்போது அனுபவ வைத்தியராகிறார். இதுவன்றி முன்னர்ச் சொன்னது போலக் கற்றுத் துறைபோகிய மருத்துவரிடமோ பாரம்பரிய மருத்துவரிடமோ. பணியிற் சேர்ந்து பெற்றுக் கொண்ட பட்டறிவைக் கொண்டு தம் ஆசான்கள் தொடர்பு இல்லாத பிற ஊரில் மருத்துவம் செய்பவரும் அனுபவ வைத்தியராகிறார்.

பொதுவாகத் தாயை மருத்துவராகக் கருதுவது மரபு. இதனைத் தாய்க்கு ஒழித்த சூல் இல்லை என்ற ஒரு மரபுத் தொடர் உறுதி செய்கிறது. ஒரு குடும்பத்தில் அன்னையானவள் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்டவளாக விளங்குவதால் அவர்களின் விருப்பு வெறுப்புக்கு உணவு செய்வதை விட அவர்கள் உடல் ஆரோக்கியம் கருதியே உணவு சமைப்பது இயல்பு. அவ்வகையில் மருத்துவப் பொருள்களாக விளங்கும் உணவுக்குப் பயன்படும் மிளகு. சீரகம். பூண்டு. பெருங்காயம் போன்ற மூலிகைப் பொருள்களும் கீரை. கொடியில் விளையும் காய்கள். மணத்தக்காளி போன்ற காய்கறிகளை உணவிற் சேர்த்துச் செய்வதன் மூலம் குடும்பத்தின் பொது உடல் நலத்தைப் பேணுகிறாள் எனலாம். இதுவன்றிச் சிறுசிறு நோய்களுக்குக் குறிப்பாகத் தலைவலி, உடல்வலி, வாந்தி, பேதி. மயக்கம். இருமல், சுரம் போன்றவற்றிற்கான கசாயம். வேதுபிடித்தல். தயிலம். உணவாகத் தரும் மருந்துகள் போன்றவற்றைத் தாய்வழியாக அறிந்து வைத்திருப்பர். இந்த அனுபவமுறையை நாம் பாட்டி வைத்தியம் என இன்றும் சிறப்பித்துக் கூறுகிறோம் அவ்வகையில் அனுபவ வைத்தியத்தின் வகைப்பாடுகள் பலவகையாகப் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இங்குக் குறிப்பிடப்படும் வைத்தியம் என்பது தாள்சுவடி தயாரித்தவர்கள் தாங்கள் பார்த்து எழுதிய மூலப்படியில் தலைப்பு இல்லாது இருந்த காரணத்தால், சொல்லப்பட்ட செய்திகளைத் தொகுத்து வைத்திய நூல் எனத் தலைப்பிட்டனரா அல்லது பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் கூறப்படுவதால் இதனை வைத்திய நூல் என்று கூறினரா? என்ற விவரங்களை அறிய முடியவில்லை ஆயினும் இந்த வைத்தியநூல் என்ற தலைப்பில் பல்வேறு விதமான தகவல்களைக் கொண்ட நூல்கள் காணப்படுகின்றன.

286

காகிதச்சுவடி ஆய்வுகள்