உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விஷவைத்தியமும் மந்திரமும். வைசூரிக்கு மருந்து போன்ற இந்நிறுவனத் தாள்சுவடிகளை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

மாந்திரிகம்

மருந்து. இறைவழிபாடு இவையோடு நோயைப் போக்க மாந்திரிகத்தையும் நம்பினர். அதன் பயனாக மாந்திரிகம் என்ற கலை தமிழகத்தில் தழைத்தோங்கியே இருந்தது. கண்கட்டு வித்தை, பில்லி சூனியம். கண்ணேறு. காணாக்கடி மரணம். தம்பனம் போன்ற கர்ம காண்ட வித்தைகள் ஆகியவற்றால் ஏற்படும் உடல் உபாதைகளைத் தீர்க்க மாந்திரிகத்தையே அன்றைய சமுகம் நம்பியது. அவ்வகையில் மாந்திரிகத்திற்கான வழிபாட்டு முறைகள், படையல் வகைகள். சடங்குகள் முதலியன பல்வேறு நூல்களாக எழுந்தன. இத்துறையில் சல்லியம் என்ற நூல் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விஷபேதி வைத்தியம். சாப நிவர்த்தி தீட்சை. நட்சத்திரக் காண்டம். விஷவைத்தியமும் மந்திரமும். வைத்தியப் பலதிரட்டு போன்ற தாள்சுவடிகள் இது தொடர்பானவையாக அமைந்துள்ளதைக் காணலாம்.

சோதிடம்

சோதிடக்கலை என்பது இந்நாட்டின் பழம்பெரும் கலைகளில் ஒன்றாகும். கோள்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வோர் உறுப்புகளுடனும் தொடர்புடையதாகக் கருதுவது இக்கலை. ஆகவே நோய்கள் ஏற்படுவதற்கும் அகாலமரணம் எய்துவதற்கும். தீரா நோய்கள் ஏற்படுவதற்கும் கிரகக் கோளாறுகள் தான் காரணம் என இக்கலை வலியுறுத்தும். ஒருவனை நோய் வந்தணுகுவதற்குச் சோதிடப் பிடிதம் என்று கூறும் சோதிட சாத்திரம். ஒருவன் பிறக்கும் போது சூரியன் எந்த இராசியில் இருக்கின்றதோ அந்த இராசியின் ஆதிக்கத்தைக் கொண்டும் நோய் ஏற்படும். காட்டாகக் கன்னி இராசியில் சூரியன் இருக்கும் போது பிறப்பவர்களுக்குக் குடல் நோயும் மேடராசியில் சூரியன் இருக்கும் போது பிறப்பவருக்குத் தொண்டை நோயும் உண்டாகும்.

கட்டுதல், பற்று. ஒற்றடம், பூச்சு, வேது. களிம்பு ஊதல் முதலிய புற மருந்துகள் 32இல் அட்டை விடல்' என்பதும் ஒன்றாகும். கெட்ட நீர். சீழ் மற்றும் அசுத்த இரத்தத்தை வெளியேற்ற அட்டையை விடுதல் அக்காலச் சித்தமருத்துவர் மேற்கொண்ட ஒரு முறை, இதுபற்றி மருத்துவ நூல் ஒன்று ஓர் அட்டவணைக் குறிப்பைத் தருகிறது. அதனை ஈண்டுக் காண்போம். பிரதமை - பெருவிரல்: துதியை உள்ளங்கால். திரிதியை முழங்கால் சதுர்த்தி - தொடை பஞ்சமி - குய்யம் சஷ்டி - நாடி சப்தமி - தனம் அஷ்டமி - சரம் நவமி - கழுத்து தசமி - அந்தரம் ஏகாதசி - நாக்கு சாளதசி - நெற்றி சதுர்த்தி - பிடரி பூரணம் - உச்சி எனக் குணபாடம் என்ற மருத்துவ நூல் விளக்குகிறது.

நாடியைப்பற்றிக் கூறும்போது திங்கள். புதன், வெள்ளி -வாதம்: சனி. ஞாயிறு. செவ்வாய் பித்தம்: வியாழன் சுக்கிலபட்சம் - வாதம்: வியாழன் கிருஷ்ணபட்சம் சிலேத்துமம் என நாடி நூல் கூறுகிறது.

ரேவதி - பரணி, சுவாதி . ஆயில்யம் போன்ற நட்சத்திரத்தில் சிலேத்துவ நாடி மிகுந்து காணப்பட்டால் அந்நோயாளி மரணம் எய்துவார் எனக்கூறும். இதே போன்று 27 நட்சத்திரத்திற்கும் பலன் உண்டு. பாம்புக்கடி பற்றிப் பேசும் போது. காகிதச்சுவடி ஆய்வுகள்

.285