உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உரைநடையாக விளங்கும் பலநூறு நூல்கள் பல்வேறு செய்திகளைத் தன்னகத்தே பெற்று மருத்துவச் சாலையாக விளங்கிய போதிலும் அவற்றை வெளிக்கொணர ஆர்வலர்கள் இல்லாத காரணத்தால் இம்மருத்துவக் களஞ்சியங்கள் தூசுபடிந்து காணப்படுகின்றன.

பொதுவாக. இந்நூல்களில் நாடியில் தொடங்கி உச்சி முதல் உள்ளங்கால் வரை. கண் முதல் கணுக்கால் வரை. அசீரணம் தொடங்கி வாதரோகம் வரை. பட்சி தோசம் தொடங்கி மந்திரக் கட்டுகள் வரை இப்படிப் பல நிலைகளில் செய்திகள் விரவிக் கிடக்கின்றன. இவற்றை நாம் பறவை நோக்காகப் பார்ப்போமேயானால் இந்நூல்கள் பேசும் பல்வேறு செய்திகள் கீழ்க்கண்டவாறு அமையும்.

குழந்தை வாகடம்

இதனில், பிறந்த குழந்தையின் தொடக்கநாள் தொடங்கி, பதினொரு வயது வரை அமைந்த காலகட்டத்தில் ஏற்படும் நோய்களுக்கும் தோசங்களுக்குமான பரிகாரங்கள் கூறும் பிள்ளைப் பிணி வாகடநூல்கள்: காலை. மதியம். மாலை. இரவு போன்ற வேளைகளில் வானில் பறக்கும் பறவைகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் நிழல் தோசங்கள் பற்றிப் பேசும் பால தோசங்கள் ; குழந்தைகளுக்கு அவ்வக்காலத்தில் கட்ட வேண்டிய காப்புக் கவசங்கள் பற்றிப் பேசும் மந்திர. மாந்திரீகச் சுவடிகள் போன்றன சிறு சிறு நூல்களாக உரைநடையில் காணக்கிடக்கின்றன.

பெண் மருத்துவம்

பெண்களுக்கான சுற்பத் தருவாயில் ஏற்படும் கோளாறுகள். மகப்பேற்றின் போது ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள். வயிற்றில் குழந்தை சிதைந்தோ, இறந்தோ பிறந்தால் அதற்கான வெளியேற்று முறைகள், மார்பகம் தொடர்பான நோய்களுக்கான பரிகாரங்கள். மாதவிடாய் தொடர்பான நோய்கள். சூதக நோய்கள். பூப்பெய்துவதில் ஏற்படும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும். பெண்களின் அழகு சாதனப் பொருட்களான கண் மை. உடற்பூச்சுக்கான பஸ்பங்கள், எண்ணெய் ஆகியவை பற்றியும் பல நூல்கள் விரிந்த அளவில் பேசுவதை அறியலாம்.

மந்திரங்கள்

எண்ணியது எண்ணியவாறு நடைபெற ஒரு போக்குச் சிந்தனையோடு ஓர் இறைவனை மனத்தில் எண்ணியபடி அவ்விறைவனுக்கு உரிய மூலமந்திரத்தைச் சொல்லப்பட்ட அளவு அஃதாவது நூற்றியெட்டு. ஆயிரம். இலட்சம் என்ற கணக்கில் உருச் செய்தல் என்பதனையே மந்திர உச்சாடனம் என்பர். அவ்வகையில் குழந்தைகளுக்கான தோஷங்களை விலக்கும் மந்திரங்கள். அட்டமாச் சித்தியைப் பெற்றுத் தரும் வாலை மந்திரங்கள். தெய்வங்களைக் கட்டுப்படுத்தும் கட்டு மந்திரங்கள். பில்லி சூனியம் செய்து பிறரை வருத்தவும் மற்றும் பேய் பிசாசுகளை விரட்டவோ அல்லது வசீகரிக்கவோ பயன்படும் ஏவல் மந்திரங்கள். விஷக்கடிகளைக் கட்டுப்படுத்த அல்லது விலக்க அல்லது விட உயரினங்கள் நம்மை அண்டாமல் தடுக்கப் பயன்படும் கவச மந்திரங்கள் போன்ற பல்வேறு நிலைகளில் மந்திரங்கள் காணப்படுகின்றன. இவை இத்தனையுமே மருத்துவத் துறையோடு இணைத்தும் பேசப்படுகின்றன. தட்சிணாமூர்த்தி கடைக்காண்டம். தன்வந்திரி கருக்கிடை. காகிதச்சுவடி ஆய்வுகள்

284