உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொந்தமாகச் சுமார் இருபது வருடங்கள் தனிப்பட்ட ஒரு சபையையும் நடத்தி அதன் மூலமாக சிற்சில நற்பணிகளுக்கும் தொண்டாற்றியிருக்கிறேன். எனவே எளியேனுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு. தற்காலம் பிரபலமான நாடகத் தொண்டு புரியும் கம்பெனி போன்றவைகளுக்கு நற்பயனளிக்கத் தக்க சிலவற்றைக் கூறத் துணிந்தேன்"

"இவ்வளவு காலமாகக் கவனித்த பல அனுபவங்களைக் குறித்து வைத்தால். இத்தொழிலில் உள்ளவருக்கும். நாடகாபி மானிகளுக்கும் வருங்காலத்துப் பயன்படுமே யென்ற நோக்கமே இந்நூலை யெழுதும்படி தோன்றியதற்குக் காரணமாகும்" (முன்னுரை)

எஸ்.குருசாமியினுடைய முன்னுரையிலிருந்து அவர் ஏறத்தாழ 1900இல் பிறந்திருக்கலாமென்று எண்ணத் தோன்றுகிறது. 1910 முதல் 1948 வரை, தாம் பார்த்த. கேட்ட, நடித்த, எழுதியவற்றிலிருந்து தமிழ் நாடகவியலுக்கு அணிசேர்க்குமுகமாக இந்நூலை எழுதியுள்ளார்

நூலமைப்பும் சிறப்பும்

டகமும், நாடகக் கம்பெனி அனுபவங்களும் என்ற பாலர் தமிழ் நாடகவியல் நூல், நூலாசிரியர் முன்னுரை, முடிவுரைகள் நீங்கலாக இருபது அதிகாரங்களில் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. 1. கலை விளக்கம். 2. பராமரிப்பு, 3 பாய்ஸ் கம்பெனிகள், 4. நாடகக் கதை. 5. வசனம் - நடை. 6. பாட்டு. 7. நடிப்பு. 8 காட்சிப் பொருள்கள். 9. பாடல்கள். 10. நாடகாசிரியர்கள், 11. நடிகர்கள், 12. ஒப்பனை. 13. நாடக நிருவாகிகள். 14. நாடகப் பணியாளர்கள். 15. நாடகப் பொருள்கள் பாதுகாப்பு. 16 நடிகர்களுடைய உரிமை. 17. பின்னணி இசை. 18. மேலாளர். 19. விளம்பரம். 20 புத்தக சாலை - முதலாளி-கணக்கர் எனும் பெயர்களில் தனித் தனி அதிகாரங்கள் எழுதப் பெற்றுள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் தமிழ் உரைநடை எவ்வாறிருந்தது என்பதற்கு இந்நூலும் ஒரு சான்று. ஆயினும் இந்நூலில் வடமொழிச் சொற்கள். வடமொழி எழுத்துக்களின் கலப்பு 'தவிர்க்க முடியாதவை போல் அமைந்துள்ளன. எளிமையாக, உவமைத் தொடர்களுடன், சான்றுகளுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல் தமிழ் நாடகவியலில் சிறந்த சேர்க்கையாகும்.

முடிவுரை

தற்காலத் தமிழ் நாடகக் குழுக்களில் பாலர் நாடகக் குழுக்களின் (Boys Companies) இலக்கணங்களை வரையறுத்த நாடகமும், நாடகக் கம்பெனி அனுபவங்களும் என்ற தாள் சுவடி இப்போது பதிப்பித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலிருந்து வெளியிடப் பெறுகின்றது. அதைப் போன்று. தமிழ் மரபு - வடமொழி மரபு நாடக இலக்கணங்களை நான்கு இயல்களில் வரையறை செய்து எழுதப் பெற்றுள்ள நாடகவியல் விளக்கம் என்ற நூலும் பதிப்பாகி வெளியிடப் பெறுமாயின் நாடகத் தமிழ் அன்னைக்கு அணி சூட்டியதாகும்.

304

காகிதச்சுவடி ஆய்வுகள்