உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாடகத்தை ஒரு பெரிய ஆத்ம சாதனக் கருவியாக முன்னோர் பலர் கண்டதனால் தான். அதற்குத் தமிழில் இடங்கிடைத்து ..."

இந்நூலின் இறுதிப்பகுதியும். நூலகத்தாரின் குறிப்பும் கீழே கொடுக்கப்

படுகின்றன.

"இத்தகைய மேன்மையான நாடக. நாட்டியக் கலைகளைப் பலர் இகழ்ந்து பேசாவண்ணம் காத்து ... கலைச்செல்வியின் காப்பாளராகப் பல்லாண்டுகள் வாழப் பரமனை நாம் மனமாரப் பிரார்த்திப்போமாக."

கலை யோங்குக! கலை வாழ்க!!

முற்றும்

"இந்நூல், நாடக அனுபவங்கள் என்னும் பெயர்த்து. குருசாமி என்பவரால் எழுதப்பெற்றது. நன்றாக இருபது அத்தியாயங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. முகவுரை தொடங்கி முடிவுரையோடு முடிவுற்றது. கருத்துக்கள் அனுபவமுள்ளன. ஆய்ந்து கொள்ள நன்று."

'தமிழ் நிலையம்', 'எஸ். குருசாமி' போன்ற பெயர்கள்பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எஸ். குருசாமி எழுதிய சில நாடகங்கள் ஏ.என். பெருமாளால் குறிப்பிடப்படுகின்றன. தம் நாடகக் கம்பெனி அனுபவங்களை வைத்துத் தற்சார்பு இன்றி எஸ். குருசாமி இந்நாடக இலக்கண நூலை எழுதியுள்ளார். அவரெழுதியுள்ள சில பகுதிகளிலிருந்து அவர்பற்றிய செய்திகளையும் நூலின் இயல்பையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

நாடகங்கள், நூற்றுக்கணக்கானவை,

"சுமார் ஒன்பது வயதில் நடிக்கத் தொடங்கினேன். இன்று வரை அதை மறக்க முடியவில்லை. அதில் சுமார் நாற்பது ஆண்டுகளாக அனுபவம் உண்டு. இருபதாம் வயதிலிருந்து நாடக ஆசிரியராகத் தொடங்கினேன். இவ்வளவில் நடித்துள்ள நாடகங்கள். நூற்றுக்கணக்கானவை. எழுதியவைகளும் பற்பல. அநேக தொழிலாளிகளுடைய நெருங்கிய பழக்கமும் ஏற்பட்டது. ஆனால் 1920ஆம் ஆண்டு முதல் இருந்த பாய்ஸ் கம்பெனிகள் பழக்கங்களும் நன்றாகப் புலப்பட்டன. அக்கம்பெனிகளில் உள்ள பற்பலரைத் தற்பித்துச் செய்யும் சந்தர்ப்பமும் வெகுவாகக் கிடைத்தது. அத்தகைய கம்பெனிகளில் ஊடாடி. அந்த நடிகர்களுடனும் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பமும் கிடைத்தது.” "இம்மாதிரி கம்பெனி அனுபவங்களும். இதற்கு முற்பட்ட சிற்சில நாடகக் கம்பெனிகளின் பழக்கமும் அடியேனுக்குச் சுமார் முப்பத்தைந்து வருஷங்களாக உண்டு. அக்கம்பெனி நடிகர்களுடன் பழகும் சந்தர்ப்பமும் ஏற்பட்டு அவர்களுக்கு நாடகங்கள் போதிக்கும் சந்தர்ப்பங்களும் பல ஏற்பட்டன. இயல்பாகவே நாடகக்கலையிலும் ருசியுண்டு. அதனால் காகிதச்சுவடி ஆய்வுகள்

303