உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நூலும் அமைந்துள்ளது. ஒருவேளை பரிதிமாற்கலைஞரின் நாடகவியல் நூலுக்கு விளக்கமாகக் கூட இந்நூல் இருக்குமோ என எண்ணுவதற்கு இடமளிக்கும் வகையில் அதன் பகுப்பு முறை அமைந்துள்ளது. ஆயினும், அந்நூலுக்குச் சற்று அதிகமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதை இத்துடன் இணைக்கப் பெற்றிருக்கும் கோட்டுருவ விளக்கத்திலிருந்து (காண்க : அட்டவணை எண் 2) தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு உறுப்பும். இந்நூலாசிரியரால் நன்கு உரைநடையில் விளக்கப்பட்டுள்ளமை அறியக் கிடக்கின்றது

இந்நூலின் தொடக்கப் பகுதி வருமாறு:

"இந்நாடகவியல் நூல் நான்கு பெரும் பகுதிகளில் இயல்கின்றது. அவை பொதுவியல். சிறப்பியல், உறுப்பியல், நடிப்பியல் என்பனவாம். இவற்றுள் பொதுவியல் நாடகத்தின் பொதுவிலக் கணங்களையும், சிறப்பியல் அதன் சிறப்பிலக்கணங்களையும்,

உறுப்பியல் நாடகப் பாத்திரங்கள் முதலியவற்றின் இலக்கணங்களையும், நடிப்பியல், அந்நாடகப் பாத்திரங்கள் நடித்ததற்கான இலக்கணங்களையும் பற்றி விளங்கக் கூறும்."

இந்நூலின் இறுதிப் பகுதி. நடிப்பியல் என்ற இயலின். ஆறாம் பிரிவாகிய 'நாடக சாலை' என்பதில் 'காணுநரிருக்கையோடு முடிவடைகின்றது. தாள் சுவடியின் முதலில் அட்டவணையும். முதல் பக்கம் அச்சிட்ட பக்கமாகவும். எஞ்சிய பக்கங்கள் அச்சிடுதலுக்கேற்றவாறு எழுதப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது. இத்தாள் சுவடி. அச்சிட்டு வெளியிடுவதற்குத் தொடங்கப் பெற்று. ஏதோ காரணத்தால் நின்று போய்விட்டிருக்கிறது எனத் தெரிகிறது. வடமொழி நாடக இலக்கண மரபும் தமிழ் நாடக இலக்கண மரபும் சேர்ந்து உருவாகிய இந்நூல் அச்சிட்டு வெளியிடப் பெறுமாயின். தமிழ் நாடகவியலுக்கு அணி சேர்ப்பதாக அமையும்.

நாடகமும், நாடகக் கம்பெனி அனுபவங்களும்

1951-52இல் தமிழ் நிலையம்' எனும் நிறுவனத்தார் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திற்கு அளித்த தாள் சுவடியான நாடகமும், நாடகக் கம்பெனி அனுபவங்களும் என்ற நூலை 1948இல் எஸ். குருசாமி என்பவர் எழுதியுள்ளார். அந்நூலகம் வெளியிட்டுள்ள மூவருடச் சுவடிகள் விளக்க அட்டவணையில். ஆர் எண் 2562இன் கீழ்ப் பின்வருமாறு இத்தாள் சுவடி பற்றிய விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. தொடக்கப்பகுதி வருமாறு:

302

நாடகமும் நாடகக் கழக அனுபவங்களும்

முன்னுரை

" நாடகம் ஓர் அரிய கலை. இதில் ருசி ஏற்படுவதென்பது இயற்கை. அது பிறவியிலேயே நம்முள் அமைய வேண்டும்

அத்தியாயம்1

கலை விளக்கம்

“நாடகம் என்பது இயல், இசை, நாடகம் என்று முத்தமிழில் ஒன்று.

காகிதச்சுவடி ஆய்வுகள்