உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நூல்கள். மரபு அறிவியல் நூல்கள், கல்வெட்டுகள், கணக்கு நூல்கள் எனப் பரவலாக அந்நூலகத்தில் தாள் சுவடிகள் பாதுகாக்கப் பெறுகின்றன. இவற்றுள் தமிழ் நாடகவியல் தொடர்பான இரு தாள் சுவடிகளை மட்டுமே இக்கட்டுரை ஆராய்கின்றது.

தமிழ் நாடகவியல் தாள் சுவடிகள்

முத்தமிழில் ஒன்றான நாடகத்தமிழில் நாடக இலக்கியங்களும். அவற்றுக்கான இலக்கண நூல்களும் குறைவாகவே கண்டறியப்பட்டன. நாடகங்களுக்காகவே நாடக இலக்கண நூல்கள் பழங்காலத்தில் தோன்றிப் பின் அழிந்து போயின என்பர். ஆயினும் பிற்காலச் சோழர் காலத்திலேயே தமிழ் நாடகவியல் பரவலாகவிருந்தது. சோழர் வரலாறுகள் நாடகமாக நடத்தப்பெற்றன. மிகவும் பிற்காலத்தில். மரபு நாடகங்கள் புது வடிவங்களில் அமைந்தன. நொண்டி. குறவஞ்சி. பள்ளு, குளுவ. கூத்து எனப் பெயர் பெற்று அவை மக்களால் போற்றப்பட்டன. நிகழ்த்து கலைகளாக இருந்த இவை பின்பு ஓலைச்சுவடிகளில் இடம்பெற்றன. தஞ்சைச் சரசுவதி மகால் நூலகம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம். காஞ்சிபுரம் சங்கரமடம் மற்றும் பிறவிடங்களிலும் இவ்வகை ஓலைச்சுவடி நாடகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திலுள்ள ஓலைச்சுவடி நாடகங்கள் சிலவற்றை நாடகத்தமிழ் (1933) என்ற நூலில் பம்மல் சம்பந்த முதலியார் வரிசைப்படுத்தியுள்ளார். 19ஆம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் தோற்றம் பெற்ற பல நாடகக் குழுக்கள். நாடகக் கலைஞர்கள். நாடகக் கதைகள் போன்றவற்றை நடிகர்களும். ஆய்வாளர்களும் நூல்களாக எழுதியுள்ளனர்.

செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டிருந்த தமிழ் நாடகங்கள். 1891 முதல் பம்மல் சம்பந்த முதலியார் தொடக்கம் வசன நடையிலும். சிறுபான்மை செய்யுள் கலந்தும் எழுதப்படத் தொடங்கின. 1897இல் பரிதிமாற்கலைஞரே அவ்வகைச் செய்யுள் நாடகங்களின் இலக்கணங்களைச் செய்யுள் நடையிலமைந்த தம் நாடகவியல் என்ற நூலில் வரையறுத்தார். விபுலானந்தர் மதங்க சூளாமணி என்ற தமிழ் நாடக இலக்கண நூலை 1926இல் வெளியிட்டார். எஸ். குருசாமி என்பவர் பாலர் நாடகக்குழுவின் இலக்கணத்தை உரைநடையில் 1948இல் எழுதினார். வடமொழி மரபு - தமிழ் மரபு எனும் இரு மரபுகளின் அடிப்படையில், நாடகவியல் விளக்கம் - என்ற தலைப்பில் ஆசிரியர் பெயரிடப்படாத நாடக இலக்கண நூலின் தாள் சுவடி ஒன்றும் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் கண்டறியப்பட்டது. இதுவும் எஸ்.குருசாமியின் நாடகமும், நாடகக் கம்பெனி அனுபவங்களும் எனும் தாள் சுவடியுமே அருமை கருதி இங்கு ஆராயப்படுகின்றன. (காண்க : அட்டவணை

எண் 1),

நாடகவியல் - விளக்கம்

தற்காலத் தமிழ் நாடகங்களுக்கென எழுந்த நாடக இலக்கண நூல்களில் பரிதிமாற்கலைஞரின் நாடகவியல் எனும் நூலில் 1. பாயிரம். 2. பொதுவியல்பு. 3.சிறப்பியல்பு 4.உறுப்பியல்பு. 5. நடிப்பியல்பு எனும் ஐந்து இயல்கள் இடம் பெற்றன. அரங்கவியல் தொடர்பாக வாழ்த்து. நடத்துநர். முன்னுரை. குறிப்பு. அங்கம். களம். கூற்று. பின்னுரை. நாடக சாலை, நடிப்பியல்பு. வருண பேதம் எனும் உறுப்புக்களை அவர் விளக்குகின்றார். இவ்வடிப்படையிலேயே நாடகவியல் விளக்கம் எனும் காகிதச்சுவடி ஆய்வுகள்

301