உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆ.தசரதன்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழ் நாடகவியல் தாள் சுவடிகள்

முன்னுரை

சென்னை, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்திலுள்ள தாள் சுவடிகள் இருவகைப்படும். வெவ்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தாள்சுவடிகள் முதல் வகை. அந்நூலகத்திலுள்ள ஓலைச் சுவடிகளைப் புத்தாக்கம் (Restored) செய்ததால் ஏற்பட்ட தாள் சுவடிகள் இரண்டாம் வகை. முதல் வகையில் மூல நூல்களாக அமைவனவும் (Original manuscripts), படிகளாக (Paper manuscripts) அமைவனவும் என இரு பிரிவுகள் உள்ளன. இவற்றுள். மீண்டுமொரு முறை புத்தாக்கம் செய்து வைக்கப் பெற்ற தாள் சுவடிகள் சில காணப்படுகின்றன. இரண்டாம் வகையில் ஓரிரண்டு புத்தாக்கத் தாள் சுவடிகள் மீண்டுமொரு முறை புத்தாக்கம் பெற்றுள்ளதைக் காணலாம். இவ்வாறாக. அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தாள் சுவடிகளை வகைப்படுத்தலாம்

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தாள் சுவடிகள்

முதல் வகை

இரண்டாம் வகை

மூலநூல்

படிகளாகப்

புத்தாக்கத் தாள்

மீண்டுமொருமுறை

தாள் சுவடிகள் பெறப்பட்டவை சுவடிகள்

புதுப்பிக்கப்பட்டவை

மீண்டுமொருமுறை புத்தாக்கம்

செய்யப் பெற்றவை

இலக்கணம். இலக்கியம். சாசனம். கைபீதுகள். வமிசாவளிகள், காவிய

புராண - சிற்றிலக்கியங்கள். நாட்டுப்புறப் பாடல்கள், மருத்துவ - சோதிட அகராதி

300

-

காகிதச்சுவடி ஆய்வுகள்