உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆகும். இந்த அளவை முறை மாறுபடாதது குறிக்கத்தக்கதாகும்.

-

மேலே கண்ட தரவுகளைக் கூர்ந்து பார்க்கும் போது இரண்டு செய்திகள் புலப்படுகின்றன 1. வரலாற்றுச் சான்றுகளாக ஓலை ஆவணங்களும் பயன்பட வல்லன. 2. ஓலை ஆவணங்கள் பல்வேறு வகைப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழல்களை அளிக்கவல்லன. இவற்றை ஆய்வு செய்வதற்கு மூல ஓலைகளையும் அவற்றின் படி ஓலைகளாக சுருக்கக் குறிப்புகளாகக் காணப்படும் தாள் சுவடிகளையும் காணும் வாய்ப்பு ஒருசேரக் கிடைக்குமானால் மேற்கண்ட நில அளவை மற்றும் சமூகப் பொருளாதார ஆய்வுகளைச் செம்மையாகச் செய்ய முடியும் எனலாம். இதற்குச் செங்கற்பட்டு ஆவணங்களே சான்றுகளாம். இவை மூலை ஓலைகளாகவும் கிடைக்கின்றன. தாள் சுவடிகளில் படிகளாகவும் சுருக்கங்களாகவும் கிடைக்கின்றன. அவற்றை முறையே பயன்படுத்தி ஆய்வு செய்தால் பல்வேறு செய்திகளின் உண்மை நிலை புலப்படுவது உறுதியாகும்.

பயன்பட்ட நூல்கள்

1. ஓலைச் சுவடித்துறை. செங்கற்பட்டு மாவட்ட ஓலை ஆவணங்கள். K.A. நீலகண்ட சாஸ்திரி. சோழர்கள்.

2.

3.

தி.புஷ்கலா, செங்கற்பட்டு ஆவணங்கள் - சமூகப் பொருளாதாரம். (முனைவர் பட்ட ஆய்வேடு). தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

299