உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காணி

1

வடக்கு நஞ்சை

40

2.

வடகிழக்கு நஞ்சை

30

3

மேற்கு கிழக்கு நஞ்சை

232

932

வாரப்பற்று புஞ்சை கரம்பு நிலம் 5/2 காணியாகும். இது அரசாங்கத்திற்குச் சொந்தமான உபயோகமில்லா மேட்டு நிலப்பகுதியாகும்.

காணி

1 மேற்குப் புஞ்சை கரம்பு

22

2. தெற்குப் புஞ்சை கரம்பு

3

ஆக

52

ஆக நஞ்சை காணி 281உம் புஞ்சை காணி 799உம் ஆக. புதுப்பாக்கத்தின்

மொத்த 1080 காணி என்பது மேலே குறிப்பிட்டுள்ள செய்திகளின்படி படுகிறது.

வேப்பாப்பு 24 அடி கொண்ட கோலால் அளக்கப்பட்ட அளவையின்படி

உறுதிப்படுத்தப்

நில அளவுமுறை பிரதேசத்திற்குத் தக்கவாறு வேறுபட்டது. நிலம் அல்லது வேலி என்பது ஒரு நிலஅளவாக இருந்தது. இதுவே வடமொழியில் வாடிகா என்று அன்பில் செப்பேட்டில் குறிக்கப்படுகின்றது. அது மேலும் /2.1/4.1/8.1/20.1/80.1/320 என்ற பாகங்களாக வகுக்கப்பட்டதாகும். அதுவே மேலும் இரண்டு சில நிலைகளில் பிரிக்கப்பட்டன. அவை 1/320 என்றும் (1/320)2 என்றும் வகுக்கப்பட்டன. மூன்றாம் நிலையான (1/320)3 பிரிவு கூடக் காணப்பட்டுள்ளது. நிலஅளவை முறை எவ்வாறு நுணுக்கமாக வரையறுக்கப்பட முடிந்தது என்பது வியப்பாகவே இருக்கின்றது. செங்கற்பட்டு மாவட்டத்தில் நில அளவைக்காக 17ஆம் நூற்றாண்டில் 24 அடிக்கோலையே பயன்படுத்தியுள்ளனர் இதற்கு முன்னோடியாகப் பிற்காலச் சோழர் காலத்தில் 10ஆம் நூற்றாண்டில் பதினாறு அடிக்கோல் கடிகைக் களத்துக் கோல் ஸ்ரீபாதகோல் மாளிகைக் கோல் ஆகிய அளவைக் கோல்கள் இருந்துள்ளன. ஆனால் செங்கற்பட்டு மாவட்டத்தில் 17. 18ஆம் நூற்றாண்டு வரை 24 அடி கொண்ட கோலால் 100 குழி கொண்ட நிலம் 1 காணி என்ற அளவுகோலையே பயன்படுத்தியுள்ளனர். இந்த அளவு முறை மாறுபடவே இல்லை. ஆனால் முதலாம் இராசேந்திரன் காலத்தில் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள கீழுரில் 1 மா நிலம் 16 அடிக்கோலால் 256 குழிகள் கொண்டதாயிருந்தது. இதற்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கீழூர் அருகிலுள்ள திருவாமாத்தூரில் ‘ஒரு மா' நிலம் 16 அடிக்கோலால் 200 குழிகள் கொண்ட தாயிருந்துள்ளது. கி. பி. 1094இல் திருக்கடை யூரில் 138 குழிகள் கொண்டது 'ஒரு மா ஆனால் கி.பி. 1110இல் திருவாவடுதுறையில் ஒரு மா என்பது 128 குழிகள் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் காணியின் அடிப்படையில் நிலங்கள் அளக்கப்பட்டுள்ளன. இந்தக் காணியின் அளவு மாறுபடவே இல்லை. 24 அடி கொண்ட கோலால் 100 குழி கொண்டது ஒரு காணி காகிதச்சுவடி ஆய்வுகள்

298