உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மு. அருணகிரி & க. ஆறுமுகப் பெருமாள் தியாகராசர் கல்லூரி

மதுரை

சுவர் விளம்பரங்களும் பெண்ணுரிமைச் சிந்தனையும்

முன்னுரை

உலகிலுள்ள எந்த இயக்கமானாலும் அதன் வளர்ச்சிக்குப் பிரசாரம் பிரதானமாக அமைகிறது. இத்தகைய பிரசாரம் மேடை. நாடகம். பத்திரிகை. நூல். துண்டுப் பிரசுரம் போன்றவற்றின் வாயிலாகச் செய்யப்படுகிறது. திராவிடர் கழகம் தனது கொள்கைகளை வெளிப்படுத்த இத்தகைய பிரசாரச் சாதனங்களுள் மேடை. பத்திரிகை. நூல் ஆகியவைகளை அடிக்கடியும். முறையாகவும் பயன்படுத்தி வருகிறது நாடகத்தைத் தொடக்க காலங்களில் மட்டுமே பயன்படுத்தி வந்தது. துண்டுப் பிரசுரத்தை அவ்வப்போது தேவைப்படும் சமயங்களில் மட்டுமே பயன்படுத்தி வருகிறது. அண்மைக் காலமாகத் திராவிடர் கழகம் தனது கொள்கைகளைப் புதுமையான முறையில் - சுவரோரத் தொடர்கள் மூலமாகச் - செய்து வருகிறது. திராவிடர் கழகத்தின் இத்தகைய சுவரோரத் தொடர்களுள் பெண்ணுரிமைபற்றிய தொடர்களை மட்டுமே மையமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. இதில் மதுரை நகரில் காணப்படுகின்ற தொடர்கள் மட்டுமே ஆராயப்படுகின்றன. அவற்றுள் ஆங்கிலத்தில் அமைந்த தொடர்கள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தொடர்களைச் சுவர்களில் எழுதக் காரணம்

மனிதன் சூழ்நிலைகளால் வளர்க்கப்படுகின்றான். மாறிவரும் இந்நாட்டில் அவன் புறச்சூழ்நிலைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றான்; நிம்மதியைத் தேடி நிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கின்றான். எதையும் தாமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் குறைவாகக் காணப்படுகிறது. திராவிடர் கழகத்தின் பொதுக் கூட்டங்களுக்கு வரக்கூடியவர்கள் மிகவும் குறைவு. இத்தகைய சூழ்நிலைகளின் பின்னணியில் பார்க்கின்ற பொழுது மக்களைச் சென்று சேருகின்ற எளிமையான பிரசாரம் தேவைப்படுகிறது. அதற்குச் சுவர்களில் எழுதும் முறை. எளிமையாகத் தென்பட்டதாலும். எல்லோராலும் அடிக்கடிப் பார்க்கக்கூடிய படிக்கக்கூடிய வாய்ப்புக் கிட்டும் என்பதாலும் கையாளப்பட்டது எனலாம்.

தொடர்களை எழுதும் இடங்கள்

தொடர்களை எழுதுவதற்குச் சாலையோரத்துச் சுவர்கள். பள்ளி, கல்லூரி. காகிதச்சுவடி ஆய்வுகள்

309