உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருத்துவமனைகளின் சுற்றுச் சுவர்கள். மேம்பாலங்களின் ஓரப்பகுதிகள். கைப் பிடிச்சுவர்கள் போன்ற இடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெண்ணடிமையும், பெண்ணுரிமையும்

பெண்ணடிமை என்பது கண்டிக்கப்பட வேண்டிய செயல்களுள் ஒன்று. இயல்பாகவே காலத்தின் கரங்கள் தன் தாலாட்டை என்றும் ஆண்களுக்கே அளித்து வந்திருக்கிறது. 'தந்தை மகற்காற்றும் நன்றி' என்றும் 'மகன் தந்தைக்காற்றும் உதவி' என்றும் பாடித் திருவள்ளுவரும் ஆண்களையே முன்னிலைப்படுத்துகின்றார். பெண்கள் என்றாலே அலட்சியப்படுத்திப் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இந்தச் சமூகம் பெண்ணினம் முழுவதையும் நடத்தி வருகிறது. பாட்டாளிகளுக்கு விடுதலை கேட்டுப் போராடிய இயக்கங்கள்கூடப் பெண்ணினத்தின் விடுதலைக்குப் போராட வில்லை. ஒருவேளை அத்தகைய இயக்கங்கள் பாட்டாளி வர்க்கம் என்றாலே ஆண்கள்தான் என்று எண்ணியிருக்கக்கூடும்.

பெண்ணடிமை : அக்காலமும், இக்காலமும்

"ஒரு தேசத்தின் நாகரிகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்ன தன்மையுடையதென்று கண்டுபிடிக்க வேண்டுமாயின் அதைக் கண்ணாடி போல விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாஷையிலுள்ள இலக்கியம். அதாவது காவியம் முதலிய நூல்களேயாம்""

என்பார் பாரதியார். இலக்கியம் என்பது அது தோன்றிய காலச் சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடி பாரதத்தில் நிலவிவரும் இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் பெண்ணடிமைத் தனத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. 'தீ'கூடச் சீதையைத் தீண்டிவிட முடியாது என்பதை உணர்ந்த இராமன். அவள் அசோகவனத்தில் இருந்து திரும்பியபின், தவறு செய்திருப்பாளோ? என்று எண்ணி, 'தீக்குளிக்க' வைக்கின்றான். இது ஒருவகையில் பெண்ணடிமை எனலாம். சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன இராமன் தானும் தன் மெய்மையை நிலைநாட்டத் தீக்குளிக்கவில்லை. இராஜசபையின் நடுவே துரௌபதை துகிலுரியப்பட்டதும் பெண்ணடிமையின் ஒருபகுதி எனலாம். பத்தினிப் பெண்களின் வாழ்க்கையெல்லாம் கொத்தடிமைகளின் வாழ்க்கை யாகத்தான் இருக்கிறது. பெருவியாதி பிடித்த கணவனை விபசார விடுதிக்கு அழைத்துச் சென்றாள் நளாயினி. தம்பியின் காமத்தைத் தணிவிக்கத் தானே தயார் என்றாள் அருணகிரிநாதரின் சகோதரி. இவையெல்லாம் அக்காலப் பெண்களின் அவலநிலையினைக் காட்டுகின்றன.

வானத்தில் மனிதன் குடியேறுவதற்கான அறிவியல் திட்டங்கள் தொடங்கி விட்டன. கணிப்பொறி என்ற இயந்திர முனையும். ரோபோட் என்ற இயந்திர மனிதனும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இந்த அறிவியல் உலகத்தில்கூடப் பெண்கள் அடிமைகளாகவே இருக்கின்றனர். அண்மையில் இராஜஸ்தான் மாநிலத்தில் கணவனுடன் உடன்கட்டை ஏற முயற்சித்த ருப்கன்வரின் நிலையும் இக்கருத்துக்கு

1 சி. சுப்பிரமணியபாரதி, பாரதியார் கட்டுரைகள், பக். 116, 117.

310

காகிதச்சுவடி ஆய்வுகள்