உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வலுவூட்டுகின்றது. பெண்களைப் போகப் பொருளாகவும். பொழுது போக்குக் கருவியாகவும் கருதும் போக்கு அன்று முதல் இன்று வரை காணப்படுகிறது. மனித சமுதாயத்தில் பெண்களுக்குச் சமநீதி கிடைக்காத நிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.

இத்தகைய நிலையிலுள்ள பெண்களின் அவலத்தைப் போக்கிட முனைந்தே திராவிடர் கழகம் பின்வரும் தொடர்களை எழுதியுள்ளது. பெண்ணுரிமை தொடர்பான திராவிடர் கழகத்தின் தொடர்கள்

1. பெண்ணுக்கு உரிமை வேண்டும் மண்ணுக்கு வளமை வேண்டும்

2. பெண்ணுக்குச் சமஉரிமை வழங்குக 3. பெண் என்பவள் கடைச்சரக்கல்ல 4. பெண்கள் சமூகத்தின் கண்கள் 5. பெண்கள் சமூகத்தின் அங்கங்கள்

6. வரதட்சணை என்பது சமூகக் கொடுமை

7. மாமியார் பற்ற வைக்கும்போது வெடிக்காத ஸ்டவ்

மருமகள் பற்ற வைக்கும் போது வெடிக்கும் மர்மம் என்ன? 8. வரதட்சணை வாங்குவதும் கொலைக் குற்றமும் ஒன்றாகும் 9. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் ரொக்கத்தால் நிச்சியிக்கப்படுவது ஏன்?

10. வாழத் துடிக்கும் இளம் பெண்ணே வரதட்சணையை எதிர்த்துப் போராடு 11. பெண்ணே உன்னை நாடாமல் பொன்னையும் பொருளையும் நாடுபவனை ஏற்றுக் கொள்ளாதே 12. மாமியாரே! நீயும் முன்னாளில் ஒரு மருமகள் தான்

13. பெண்ணே! உனக்கொரு நீதி ஆணுக்கொரு நீதியா?

14. பெண்ணே பெண்ணே திரும்பிப்பார் பெரியார் கொள்கையை நினைத்துப்பார்

தொடர்களின் பாகுபாடு

மேற்கூறிய தொடர்களைப் பின்வருமாறு பகுக்கலாம்.

1. பெண்ணின் பெருமையை உணர்த்தும் தொடர்கள் 2. பெண்ணின் உரிமையை உணர்த்தும் தொடர்கள் காகிதச்சுவடி ஆய்வுகள்

311