உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. வரதட்சணை எதிர்ப்புத் தொடர்கள் 4. முரண்பாடான தொடர்

பெண்ணின் பெருமையை உணர்த்தும் தொடர்கள்

பெண் . மணம் முடிக்கும் வரை பெற்றோர்க்கு அஞ்சி வாழ்கின்றாள். மணம் முடிந்ததும் கணவனுக்கும் அவன் வீட்டார்க்கும் அஞ்சி வாழ்கின்றாள். பின்னர் அவள் பெற்ற பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு அஞ்சி வாழ்கின்றாள். இடைப்பட்ட தம் வாழ்நாளில் இந்தச் சமூகத்திற்கு அஞ்சி வாழ்கின்றாள். மணம் முடிக்கும் காலத்தில் அவளை மணமகனும் அவன் வீட்டாருமே தெரிவு செய்கின்றனர். அவளைப் பிடிக்கவில்லையானால் ஒதுங்குகின்றனர். இதே உரிமை பெண்ணுக்கும் கொடுக்கப்படுகிறதா? என்றால் இல்லை. 'கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவள். பெற்றோர் காட்டியவனுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கடையிலுள்ள சரக்கை வாங்குவோன் வாங்க வரும் வரை வியாபாரி காத்திருப்பதைப் போலப் பெண்ணைப் பெற்றவர்களும் காத்திருக்கின்றார்கள்.

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொளவதால் அறிவில் ஓங்கிஇவ் வையகந் தழைக்குமாம்"2

என்ற பாரதியின் வரிகள் கூடப் பெண்களைக் கடைச் சரக்காகக் கருதும் போக்கினைக் கண்டு வெளிப்படும் கருத்து எனலாம். கடைச் சரக்கு அழகு படுத்தப்படுவதே போலப் பெண்ணும் அழகு படுத்தப்படுகின்றாள். கடைச் சரக்கு வாங்குவோனுக்காகக் காத்திருப்பதைப் போலப் பெண்ணும் தன்னை மணப்பவனுக்காகக் காத்திருக்க வேண்டியவளாகின்றாள். சரக்குக்குரிய வியாபாரி நல்ல வாடிக்கையாளரை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போலப் பெண்ணைப் பெற்றவர்கள் அவளை விரும்பும் ஒருவன் வரும்வரை காத்திருக்கின்றனர். இவ்வாறாக. பெண். பிறப்பு முதல் இறப்பு வரை கடைச் சரக்காக நடத்தப்படும் அலைநிலையைக் கண்டுதான் திராவிடர் கழகம்,

பெண் என்பவள் கடைச் சரக்கல்ல

என்னும் தொடரை எழுதியுள்ளது

நாளைய சமுதாயம் இன்றைய கன்னிப் பெண்களின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் அச்சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணே முதற்காரணம். உயிர்களைத் தாங்கும் உயர்ந்த பணி பெண்ணுக்கு இருப்பதால்தான் அவளுக்குக் 'கற்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தப்படுகிறது. கற்புடைய பெண்களாலேயே ஒழுக்கமுடைய. சுகாதாரச் சுத்தமுடைய சமுதாயத்தை உருவாக்க இயலும். எனவே, ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பணியில் அடித்தளமாக அமைபவள் பெண்ணே என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு ஒரு சமுதாயத்தின் அடித்தளமாக. ஆணிவேராக அமையும் பெண்ணை, இச்சமூகம் ஆண்டாண்டுக் காலமாக அடக்கியே வைத்திருக்கிறது. அவள்சமூகத்தின் அங்கமாகக் கருதப்படவில்லை, பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின்

2 சி. சுப்பிரமணியபாரதி. பாரதியார் கவிதைகள், ப 501

312

காகிதச்சுவடி ஆய்வுகள்