உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பெயரைத் தலைப்பெழுத்தாகப் (INITIAL) போடமுடியாதபடி அவளுடைய தலையெழுத்து இருக்கிறது. 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று வள்ளுவரும் பெண்ணை அஃறிணையாகவே காட்டுகின்றார். திரு. வி. கலியாணசுந்தரனார் கூட. "ஆண் மகன் பெண் மகளைத் தனக்குரிய காமப் பொருளாகவும். பணியாளாகவும் கொண்ட நாள் தொட்டுப் பெண் மகள் உரிமையை இழக்கலானாள்"3

என்று சமுதாயத்தில் அவளது நிலையைக் காட்டுகின்றார். சமுதாயத்தில் அவள் இருந்த நிலையையும், இருக்கின்ற நிலையையும், இருக்க வேண்டிய நிலையையும் உணர்ந்து தான் திராவிடர் கழகம்.

பெண்கள் சமூகத்தின் கண்கள்

பெண்கள் சமுகத்தின் அங்கங்கள்

என்பன போன்ற தொடர்களை எழுதியுள்ளது.

பெண்ணின் உரிமையை உணர்த்தும் தொடர்கள்

என்றும்.

"உரிமை எல்லார்க்கும் பொதுவானது. வானத்தில் மேகம் தவழ்வது போலவும், கடலில் அலை எழுதுவது போலவும், பறவை அழகிய சிறகை வீசிப் பறப்பது போலவும். பெண் தனது உள்ளத்தெழும் விருப்ப வழி நடக்கும் உரிமையுடையவளாதல் வேண்டும் 4

"உரிமை என்பது ஒருவர் கொடுப்பதுமன்று : மற்றொருவர் வாங்குவதுமன்று. அஃது எவரிடத்தும் எல்லாவிடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது. சிலர் தமக்குள்ள வன்மையால் பிறர் உரிமையை மறித்தும் பறித்தும் வருகின்றனர்"5

என்று உரிமை குறித்துத் திரு. வி. கலியாணசுந்தரனார் கூறுகின்றார். ஆண்கள் தங்களிடமுள்ள வன்மையால் பெண்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை அடிமைகளாக்கி வைத்தனர். இத்தகைய.

"பெண்களின் அடிமைத்தனம் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பாதிக்கின்றது6

என்பார் பெரியார். இந்தச் சமுதாயத்தையும் பாதிக்கின்றது என்றும் கூறலாம். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கும் உரிமை தரப்படவில்லை என்பதால் அவர்களுக்குக் கல்வியும் மறுக்கப்படுகிறது. இருப்பினும் சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் கவிபாடி இருக்கிறார்கள். இருந்தபோதிலும் பெண்களுக்குக் கல்வி

لي

4.

5.

6.

திரு வி. கலியாண சுந்தரனார்.

பக். 34. 35.

மேலது. ப. 61.

மேலது. ப. 33.

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை.

ஈ. வெ இராமசாமி (பெரியார்). பெண் ஏன் அடிமையானாள்?, ப. 87

காகிதச்சுவடி ஆய்வுகள்

313