உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




-

மறுக்கப்பட்டிருக்கிறது. கல்விக்குரிய கடவுளை - சரஸ்வதியை - பெண்ணாகக் காட்டியவர்கள் அவளைக் கல்லாகப் படைத்தார்கள். கல்லாகப் படைத்ததனால் தானோ என்னவோ அவளது இனத்தை - பெண்ணினத்தை - கல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்பதிலும் சிலர் கவனமாக இருக்கின்றார்கள்.

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே"7

என்னும் புறநானூற்றுப் பாடல்கூடப் பெண்ணை பிள்ளைபெறும் இயந்திரமாகவே காட்டுகிறது. இப்பாடலைப் பாடிய பொன்முடியார் ஒரு பெண்பாற்புலவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்களின் உரிமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. அல்லது மறக்கடிக்கப் படுகின்றன. அவள் வேட்டையாடப்படும் மானாக, வித்தை காட்டும் புலியாக, கிளியாக நடத்தப்படுகின்றாள். பெண்ணுக்கு எல்லா நிலைகளிலும், எல்லா இடங்களிலும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் திராவிடர் கழகம்.

பெண்ணுக்குச் சமஉரிமை வழங்குக பெண்ணுக்கு உரிமை வேண்டும்.

மண்ணுக்கு வளமை வேண்டும்.

என்பன போன்ற தொடர்களை எழுதியுள்ளது. மண் வளமாக இருந்தால் தான் அதில் போடப்படும் விதைகள் பலன் தர முடியும். பெண் சமஉரிமை உடையவளாக இருந்தால் தான் இச்சமுதாயம் சிறந்து விளங்க முடியும். இங்கு.

"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு

மண்ணடிமை தீருவதும் முயற் கொம்பே"3

என்ற பாரதிதாசனின் வரிகள் நினைவுகூரத்தக்கதாகும்.

வரதட்சணை எதிர்ப்புத் தொடர்கள்

திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் பணத்தையும், பொருட்களையும் வலுக்கட்டாயமாக வாங்கிவரும் முறையே வரதட்சணை. இது முன்னாளில் சீதனம் என வழங்கப் பெற்றது. இச்சீதனம் எவ்வாறு தோன்றியது என்பதை. செ.கணேசலிங்கன்.

"நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில்தான் பெண்களின் திருமணத்தின் போது சீதனம் வாங்கும் முறை ஏற்பட்டது. சொத்துடைமை ஆண் வழியாக இருந்தபோது பெண்ணை மற்றொரு குடும்பத்துக்கு மணமகளாக அனுப்பும் வேளைக்கு நிலப் பிரபுக்கள் தமது அந்தஸ்தை நிலைநாட்டச் சீர்கள்

7. புறநானூறு. பாடல் : 312.

8 பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள். ப. 3

314

காகிதச்சுவடி ஆய்வுகள்