உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வழங்கினர்: பரிசுகள் தந்தனர். இன்று இவ்வழக்கம் கட்டாயச் சீதனம் பெண்ணுடன் வழங்கப்படுவதை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு சாதியிலும் சீதனம் (அல்லது சீர்) வழங்குவது வெவ்வேறு வடிவமாக உள்ளது "9

என்று கூறுகின்றார். இந்தச் சீதனமே இன்று இங்கு வரதட்சணையாக வளர்ச்சி பெற்றுள்ளது எனலாம். இது குறித்துப் பாரதியார்.

"மானமுடைய தேசங்களிலே சீதனம் கொடுத்தல் பெண்களின் பெற்றோர் செய்வது சாதாரணமேயாம். ஆனால் மாப்பிள்ளைகளுக்கு விலைத்தரங்கள் போட்டு. இன்ன பரீஷை தேறினவனுக்கு இத்தனை ரூபாய் கிரயம் என்று முடிவு செய்து வைத்து அதன்படி விவாஹங்கள் நடத்தும் வழக்கமில்லை, சீனா. ஜப்பான். நவீன பாரசீகம் முதலிய எல்லா மனுஷ்ய தேசங்களிலேயும் விவாஹம் அன்பையே ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகிறது. இங்கே. பணத்துக்காக விவாஹங்கள் செய்து கொள்ளுகிறார்கள் . மாப்பிள்ளைகளோ உயர்ந்த கிரயங்கள் கொடுத்தாலொழிய அகப்படுவதில்லை ho

+

என்று கூறுகின்றார். வலுக்கட்டாயமாக வாங்கப்படும் இந்த வரதட்சணையைக் கண்டித்துத்துதான் திராவிடர் கழகம்.

வரதட்சணை என்பது சமூகக் கொடுமை

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிற தென்றால்

ரொக்கத்தால் நிச்சயிப்பது ஏன்?

என்பன போன்ற தொடர்களை எழுதியுள்ளது.

வீட்டுக்கு வரும் மருமகளிடம் பெறும் பணத்தைக் கொண்டே தமது சமூகநிலையையும், பொருளாதார நிலையையும் பெருக்கிக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கின்றனர். இந்த நினைப்பு நிறைவேறாத இடங்களில் ஸ்டவ்கள் வெடிக்கின்றன. எனவே தான் திராவிடர் கழகம்.

மாமியார் பற்ற வைக்கும் போது வெடிக்காத ஸ்டவ்

மருமகள் பற்றவைக்கும்போது வெடிக்கும் மர்மம் என்ன?

என்ற தொடரை எழுதியுள்ளது.

"மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமை யைக்கொ ளுத்துவோம்"11

என்றார் பாரதியார். இன்றோ மாதரை வரதட்சணைக் கொடுமையால் இழிவு படுத்துகின்றனர். மடமையைக் கொளுத்துவதை விட்டுவிட்டு அவளைக் கொளுத்துகின்றனர்.

9 செ. கணேசலிங்கம். பெண்ணடிமைதீர.ப. 63.

10 சி. சுப்பிரமணியபாரதி. மாரதியார் கட்டுரைகள். பக். 267. 268.

11 சி.சுப்பிரமணியபாரதி. பாரதியார் கவிதைகள். ப. 180.

காகிதச்சுவடி ஆய்வுகள்

315