உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருமகள் என்னும் பெண்ணின் கொடுமைக்கு மாமியாரே காரணம் என்பதனால்தான் திராவிடர் கழகம்.

மாமியாரே! நீயும் முன்னாளில் ஒரு மருமகள் தான்

என்னும் எச்சரிக்கைத் தொடரை எழுதியுள்ளது.

அண்மைக் காலமாகப் பெண்ணின் குணத்தை நாடாமல் பணத்தை நாடும் போக்கு அதிகரித்து வருகிறது. நல்ல பெண்ணாய் இருப்பினும் கேட்ட வரதட்சணை கொடுக்கவில்லை என்பதற்காக அவள் மறுக்கப்பட்டிருக்கின்றாள். நல்ல பெண்ணாய் இல்லாமல் இருப்பினும் அவளிடம் பணம் குவிந்திருந்தால் அவள் ஏற்கப் பட்டிருக்கின்றாள். திருமணத்திற்கு விலக்காவோரைக் குறித்துக் கூறுகையில் திரு.வி.கலியாணசுந்தரனார்.

ரு

"பெண்மையை விரும்பாது பொருட்காதல் மட்டுங் கொண்டு. இவ்வளவு ஆயிரம் கொடுத்தால் பெண்ணைக் கொள்வேன்' என்று சொல்வோனும் விலக்கானவனே... என்னை? அவனது காதல் பொருளைப் பற்றிக் கிடக்குமேயன்றிப் பெண்ணைப் பற்றிக் கிடப்பதில்லை. மேலும் அன்னான் பொருளின் பொருட்டு மற்றொரு பெண்ணை நாடினும் நாடுவன். இந்நாளில் பொருள் மணங்கள் நடைபெறுகின்றன. இம்மணங்கள் னல் அன்பற்றனவாம். பெண் வாழ்விற்கெனப் பெற்றோர் அன்பால் பொருள் கொடுக்கலாம். அது வேறு. பொருட்கு முதன்மை அளித்து. 'இவ்வளவு வேண்டும்' என்று வலியுறுத்துவது பெண்ணின் நுண்மை யுணர்ந்து மணஞ் செய்வதாகாது"" "12

என்பார் அழகுக்காகவோ, பணத்திற்காகவோ ஒரு பெண்ணை மணப்பது அடித்திருக்கும் வர்ணத்திற்காக வீட்டை விலைக்கு வாங்குவதற்கு ஒப்பாகும். பொன்னுக்காகவும். பொருளுக்காகவும் பெண்ணை மணக்க விரும்புவோனை மறுதலிக்க வேண்டும் என்ற உண்மையை உணர்ந்துதான் திராவிடர் கழகம்.

பெண்ணே உன்னை நாடாமல்

பொன்னையும் பொருளையும் நாடுபவனை ஏற்றுக் கொள்ளாதே

என்ற தொடரை எழுதியுள்ளது

ஆடவனைப் பெற்றவர்கள் தம் பிள்ளைக்கு அதிக விலை கேட்கின்றனர். பெண்ணைப் பெற்ற பரிதாப ஜீவனோ சில சமயங்களில் தன் பெண்ணுக்கு ஒரு மணமகனைத் தேடுவதற்குள் அனைத்தையும் விற்க நேரிடுகிறது. சில சமயங்களில் பிச்சைக்காரனாகவும் ஆகிவிட வேண்டியிருக்கிறது. இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் மகள் என்பவள் பெருந் தொல்லையாகக் கருதப்படுகிறாள். தமிழகத்தில் கூட உசிலம்பட்டியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒரு பழக்கம்

12. திரு.வி.கலியாண சுந்தரனார். பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை. ப. 211. காகிதச்சுவடி ஆய்வுகள்

316