உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்றும் வழக்கத்தில் உள்ளது. பெண் குழந்தை பிறந்தவுடன் அதன் மெல்லிய இதழ்களிடையே கொதித்துக் கொண்டிருக்கும் கருவாட்டுக் குழம்பினை ஊற்றிக் கொன்று விடுகின்றனர். இதே போலத் திருமங்கலத்தை அடுத்துள்ள சிற்றூர்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் அவர்களது இதழ்களுக்கிடையே பச்சை நெல்லை வைத்து உறங்க வைப்பர். காலையில் குழந்தை இறந்து விடும். இத்தகைய தவறுகள் பெண்களின் சம்மதத்தின் பேரிலேயே நிகழ்கின்றன. இப்படிப்பட்ட கொடூரங்களுக்குக் காரணம் அவள் குடும்பத்திலுள்ள பொருளாதாரச் சிக்கலே: அதாவது எதிர்காலத்தில் அவளால் தோன்றவிருக்கும் வரதட்சணைச் சிக்கலே

எனலாம்.

பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் மண்ணில் பட்டால் மாசுபடும் என்று கண்ணில் வைத்துக் காக்கிறார்கள். பெண்ணாக இருந்தாலோ மண்ணில் பட்டால் தமக்கு மாசு உண்டாகும் என்று கருதியோ என்னவோ பெற்றோர்கள் அம்மண்ணுக்கே இறையாக்குகிறார்கள். இத்தகைய தவறுகளையெல்லாம். மனமறிந்து செய்யும் குற்றங்களையெல்லாம் தாங்கிக் கொள்வதால் தானோ என்னவோ பெண்ணினத்தின் பெயரால் இந்தப் பூமியைப் 'பூமா தேவி' என்று அழைத்துப் பொறுமையின் சின்னமாக ஆக்கிவிட்டார்கள்.

சில பெண்கள் தவறு செய்யும் இத்தகைய நிலையினைக் கண்டு பல பெண்கள் கொதித்து எழாமல் இருக்கும் நிலையினைத் திராவிடர் கழகம் உணர்ந்து தான்.

பெண்ணே உனக்கொரு நீதி

ஆணுக்கொரு நீதியா?

வாழத்துடிக்கும் இளம் பெண்ணே

வரதட்சணையை எதிர்த்துப் போராடு

என்பன போன்ற தொடர்களை எழுதியுள்ளது. இவற்றுள்,

பெண்ணே உனக்கொரு நீதி

ஆணுக்கொரு நீதியா?

என்னும் தொடரில் இன்னொரு உண்மையும் மறைந்துள்ளது.

ம்

மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்ளலாம். கணவனை இழந்தவள் அப்படிச் செய்ய முடியாது: கூடாது. காரணம் ஆணின் அடக்கியாளும் பண்பேயன்றி வேறில்லை. இளம் வயதிலேயே கணவனை இழந்தால் அப்பெண் விரும்பும் சமயத்தில் அவளுக்கு மறுமணம் செய்விப்பது தவறல்ல. திரு. வி. கலியாண

சுந்தரனார் கூட,

“பெண்மகள் கைம்மை எய்தினால் என்ன? ஆண்மகன் அந்நிலை எய்துவதில்லையோ? பெண்மகள் கைம்மை எய்தியதும் அவள்பாலுள்ள இயற்கை ஓடிவிடுகிறதோ? உயிர் போய் விடுகிறதோ? கடவுள் மறைந்து விடுகிறாரோ? படைப்பில் என்ன குறைவு ஏற்படுகிறது? அவள் 'எதிரில் வரக்கூடாதாம் : காகிதச்சுவடி ஆய்வுகள்

817