உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கூட்டங்களில் போகக் கூடாதாம்; நல்வினைகளில் தலைகாட்டக் கூடாதாம்; உடையையும் உணவையும் சுருக்கல் வேண்டுமாம்; அப்பெண் மூதேவியாய் விட்டாளாம் : கைம்மை எய்திய ஆண்மகனோ எல்லாவற்றினுங் கலந்து கொள்ளலாம் : அவன் பல்லிழந்த முதியனாயினும் பதினாறு வயதுக் கட்டழகியை மணஞ்செய்யலாம் : என்ன வேற்றுமை ; இவ்வேற்றுமை இயற்கையில் உள்ளதா? கடவுள் கண்டதா? இஃது இரக்கமிலா வன்கணாளர் இடைக்காலத்தில் விதித்த கொடுமை கொடுமை 13

என்று ஆவேசப்படுகின்றார். மறுமணத்தில் ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் வழங்கப்பெறும் நிலையை உணர்ந்துதான் திராவிடர்-கழகம்.

பெண்ணே உனக்கொரு நீதி ஆணுக்கொரு நீதியா?

என்னும் தொடரை எழுதியுள்ளது எனலாம்.

வரதட்சணையைக் கண்டிக்கும் திராவிடர் கழகத்தின் தொடர்களுள். வரதட்சணை வாங்குவதும் கொலைக் குற்றமும்

ஒன்றாகும்

என்பதும் ஒன்றாகும். இதில் வேண்டுகோள் ஒன்று மறைந்திருக்கிறது. அதாவது கொலை செய்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டணை வரதட்சணை வாங்குபவர் களுக்கும் அளிக்கப்படும் என்று அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பதாகும். இப்படிச் செய்வதன் மூலம் வரதட்சணை வாங்குவோர் எண்ணிக்கை குறையலாம். ‘வரதட்சணை வாங்குவது தவறு' என்று சட்டம் இருக்கிறது. இருந்து என்ன பயன்? திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது

-

- அதைச்

(படம் : திருடாதே

பொருளுக்கு உரியவனுக்குத் தெரிந்தே திருடுகிற கூட்டம்தான் வரதட்சணையை வலுக்கட்டாயமாக வாங்கும் கூட்டமாகும். இத்தகைய கூட்டத்தின் திருட்டை ஒழிக்கச் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது எனலாம்.

முரண்பாடான தொடர்

318

"ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது .. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும். பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாக

திரு. வி. கலியாண சுந்தரனார். பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை, ப. 290. காகிதச்சுவடி ஆய்வுகள்