உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல14

என்பார் பெரியார்; இவ்வாறு கூறியவரால் தொடங்கப் பெற்றதுதான் திராவிடர் கழகமாகும். இது பெண்களின் உரிமைகளை முழங்குவதோடன்றிச் சுவர்களில். பெண்ணே பெண்ணே திரும்பிப்பார்

பெரியார் கொள்கையை நினைத்துப்பார்

என்றும் எழுதுகிறது.

To

முடிவுகள்

1. திராவிடர் கழகத்தின் சாலையோரத் தொடர்களுள் சுமார் பதினான்கு பெண்களைப் பற்றியவை ஆகும். அவற்றுள் ஏழு வரதட்சணை பற்றியவை ஆகும்.

2. பதினான்கு தொடர்களில் நான்கு தொடர்கள் பெண்களை நேரிடையாகக் கேட்டுக் கொள்ளும் தொடர்களாகும். எஞ்சிய பத்துத் தொடர்களும் அவர்களது உரிமை, வலிமை போல்வனவற்றை வலியுறுத்துவாகும்.

3. தொடர்கள் உரைநடையிலோ. கவிதை நடையிலோ அமையாது பெரும்பாலும் கவிதை கலந்த உரைநடையில்தான் அமைகின்றன எனலாம்.

4. திராவிடர் கழகத்தின் தொடர்கள் அதன் கொள்கைகளோடு சம்பந்தப் பட்டவைகளாகவே பெரும்பாலும் அமைகின்றன. அவை உணர்த்தும் உண்மைகள் பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளாகவே இருக்கின்றன.

5. திராவிடர் கழகம் இத்தகைய தொடர்களைச் சுவர்களில் எழுதக் காரணம் மக்கள் பார்வையில் விழும் என்பதாலும் அதன் மூலம் அவர்களிடையே விவாதங்கள் எழும் என்பதாலும் ஆகும்.

6. திராவிடர் கழகத்தைப் போல வேறு எந்த இயக்கமும் மக்களுடைய தேவைகளை, குறிப்பாகப் பெண்களுடைய கோரிக்கைகளை இவ்வளவு பரவலாகச் சுவர்களில் எழுதியதாகத் தெரியவில்லை.

7. விதவை மணத்தை ஆதரிக்கும் தி. க. அதுபற்றிய தொடர்களை எழுதுவதில் அவ்வளவாக ஆர்வங் காட்டவில்லை.

8. பெண்ணினம் எவ்வாறு விடுதலை பெறும். அதற்கான தீர்வு என்ன என்பது பற்றிய தொடர்களை எழுதவில்லை.

பெண்

9. பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் மனித இனம் அதிலிருந்து ஒட்டு மொத்தமாக மீளும் போதுதான் பெண்ணினமும் விடுதலை பெறும். அதற்காகத் திராவிடர் கழகம் போராடினாலும் சமூக மாறுதலை அது விடுதலையுடன் பார்க்கவில்லை. ஏனெனில் சமுதாய மாற்றம் என்பது அணுகுண்டல்ல. போட்டவுடன் வெடிப்பதற்கு. அத்தகைய சமுதாய மாற்றங்கள் நிகழும் வரை பெண்ணின் உரிமைகளும், அடிமைத் தனங்களும் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

14.வெ. இராமசாமி (பெரியார்), பெண் ஏன் அடிமையானாள்?, பக். 82.83

காகிதச்சுவடி ஆய்வுகள்

319