உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எ. ஜான்சன் ரெத்தினசாமி

ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

தஞ்சைத் திருப்பணி அறிக்கை ஓர் ஆய்வு

முன்னுரை

கிறித்தவத் திருச்சபைகளை இந்தியாவில் தொடங்கிய திருத்தொண்டுப் பணியாளர்கள் தங்களது பணிகளை. பணியிடங்களை, பார்த்த மக்களை. பழக்கவழக்கங்களைப்பற்றித் தங்களது தினப் பதிவேடுகளிலும், நாட்குறிப்புகளிலும், கடிதங்களிலும் பதிவு செய்துள்ளனர். அப்பதிவுகள் இன்று ஆராயப்படவேண்டிய பெரிய ஆழ்கடலாகவும். ஆராய்ச்சியாளர்களை வரவேற்கிற பெரிய ஆவணப் பெட்டகங்களாகவும் உள்ளன என்றால் மிகையாகாது. இதனடிப்படையில் எத்தனையோ செய்திகள் இருந்தாலும் 1836இல் தஞ்சைத் திருச்சபையில் திருத்தொண்டர்கள் (Missionary) செயல்படுத்திய திருத்தொண்டுகள். பள்ளிகள் அக்கால ஆசிரியர்கள், உபதேசியார்கள். மாணவ மாணவிகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை உரிய ஆவணங்களின் அடிப்படையில் இக் கட்டுரை ஆராய்கிறது.

தஞ்சையில் கிறித்தவம்

-

தஞ்சையில் கிறித்தவம் 16ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இயேசு சபையினரால் (Jesuits) தொடங்கப்பட்டது. அப்பொழுதிருந்த மன்னர்கள் தஞ்சையில் கிறித்தவத்தை அனுமதிக்கவில்லை. இதனால் பலவித உயிர் இழப்புகளையும் சிறை வாசங்களையும் திருத்தொண்டர்கள் அனுபவிக்க வேண்டி இருந்தது. இக்கால கட்டங்களில் தஞ்சையின் அரண்மனைப் பணியாளரான இராசநாயக்கன் (1700 1771) என்ற உரோமன் கத்தோலிக்கர் தரங்கையில் பதிப்பிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டை 1727இல் பெற்றார். அவர் அதில் ஆர்வம் கொண்டவராகத் தரங்கை சென்று. தரங்கை லுத்தரன் சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு அவருக்கு உபதேசியராகப் பயிற்சியளிக்கப்பட்டுத் தஞ்சைக்கு அனுப்பப்பட்டார். ஏனெனில் தஞ்சைக்குள் எந்த வெளிநாட்டுத் திருத்தொண்டரும் 1727 வரை அனுமதிக்கப்படவில்லை. சீகன்பால்கு பாதிரியார் இந்தியரைப் போல உடையணிந்து தஞ்சைக்குள் நுழைய முனைந்த போது, அவர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு. திருப்பி அனுப்பப்படுகிறார். தஞ்சை மண்ணின் மைந்தரான காகிதச்சுவடி ஆய்வுகள்

320