உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




த.கோ.பரமசிவம்

தலைவர் ஓலைச்சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

அச்சு 'நூல்களுக்குப் பின்பும் ஓலைச் சுவடிகள்

மனித குலத்தின் கருத்துப் பரிமாற்றத்திற்காகத் தோன்றிய மொழி ஒலி வடிவிலேயே பன்னெடுங்காலம் இருந்தது. நாளடைவில் ஒலி வடிவத்தில் வரி வடிவங்களும் தோற்றுவிக்கப்பெற்று அவ்வொலிகள் வரி வடிவ நிலையில் பதிவு பெற்றன. எழுப்பப்பெறும் ஒலி எழுத்தானது. அதுவே எழுதப்பெறுதலின் எழுத்தாகவும் பொருள் பெற்றது. இவ்வாறு மலர்ந்த மொழி பல்வேறு பொருள்களைக் கொண்டு பல்வேறு பொருள்களின் மீது பதிவு செய்யப்பெற்றன. எழுதப்பெற்றன. மண். கல். மரம் மூங்கில். நாணல். எலும்பு துணி, இலை. ஓலை. பட்டை, தோல். மடல். உலோகம் எனப் பல பொருள்கள் எழுது பொருள்களாக மாறின மனித குலம் தழைத்த எல்லாப் பகுதிகளிலும் இவை வழக்கில் இருந்தன என்றாலும் சிற்சில பகுதிகளில் சில எழுதுபொருள்கள் பரவலாகவும் பெருவாரியாகவும் பயன்படுத்தப் பெற்றன. மேலை நாடுகளில்

ஆயின் கீழைநாடுகளில் மரப் பட்டைகளும். ஓலைகளும், உலோகத்தகடுகளும் அதிகம் பயன்படுத்தப் பெற்றன. இவ்வாறே எழுதுகோல்களின் வண்ணம். வடிவு போன்றனவும் மாறுபட்டன. இன்றோ உலகம் முழுவதும் ஒருபடித்தாகத் தாள்களே எழுது பொருள்களில் முதல் இடம் பெற்றுள்ளன. எழுதுபொருளாகத் தாள்கள் உற்பத்தி செய்யப் பெற்றவுடன் நூல்களின் பலபடிகளை உருவாக்கிப் பல்வேறு இடங்களுக்கும் பரவலாக்கிய பெருமை அச்சுக் கலைக்கு உரியதாம். இக்கட்டுரை அச்சு நூல்கள் தோன்றிய பிறகும் தமிழ்நாட்டில் ஓலைச் சுவடிகளில் படி எடுக்கும் வழக்கம் தொடர்ந்ததைக் காண முயல்கிறது.

ஆயின் கீழைநாடு. துணி. மூங்கில் போன்றன பெருவாரியாகப் பயன்பட்டன.

தமிழ்நாட்டின் எழுதுபொருள்கள்

தொல் பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் எழுதுபொருள்களின் பதிவுகள் காணப்படுகின்றன. தொல்காப்பியர்க்கு முற்பட்ட காலத்திலும் பல்வேறு வகையிலும் தமிழ்மொழி இலக்கிய இலக்கணச் செறிவுடன் காணப்பெற்றன. எழுதுபொருள்களாக உலோகத் தகடுகள். சுவர். கற்பாறைகள், மடல்கள். துணி, ஓடுகள். ஓலைகள் பயன்படுத்தப் பெற்றன. நடுகற்களில் ஓவியமும் விளக்கமும். சிற்பமாக வடித்த நிலை பீடும் பெயரும் எழுதிய தலைவியின் உருவெழுதிய கிழியைத் தலைவன் கொண்டிருந்தது. கோவலனுக்கு மாதவி எழுதிய மண்ணுடை முடங்கல்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

$27