உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அகழ்வாய்வுகளில் கிடைத்த மண்பானைகளில் உள்ள எழுத்துகள். கற்பதுக்கை மற்றும் படுக்கைகளில் உள்ள வடிவங்கள். கோயிற் கல்வெட்டுகள். செப்பேடுகள் எனப் பலப்பல சான்றுகள் மிக எளிய நிலையிலேயே கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் ஊடுருவிக் காணும் போது பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பெற்ற வழக்கமே பெருகவும் மிகப் பரவலாகவும் இருந்தமையைத் தமிழகத்தில் உணரலாம். இன்றைய நிலையில் தாள்களின் பயன்பாடு எளிமையாகவும். பரவலாகவும் பெருகவும் இருப்பதுபோல் அன்று ஓலைகளின் பயன்பாடு இருந்திருக்கிறது. எழுதுவதற்குப் பயன்பட்ட ஓலைகளின் வகைகளும் பலவாக இருந்திருக்கின்றன. நாட்டுப் பனைஓலைகள், சீதாள. கூந்தற் பனைஓலைகள். திருநெல்வேலி ஓலைகள். யாழ்ப்பாண ஓலைகள். மலையாள ஓலைகள் எனப்பலவாகும். இவை தனித்தனியே அகலம். நீளம். பருமன் ஆகியவற்றில் வேறுபட்டும் ஓலை அமைப்பு என்பதில் ஒன்றுபட்டும் காணப்பெற்றன. பாலபாடம் படிக்கும் அரிச்சுவடி எண் சுவடிப் பயிற்சிக் காலமுதலாகப் பெருங்காவியங்களைப் படி எடுக்கும் வரை எல்லா நிலைகளிலும் இவை பயன்பட்டன.

-

இலக்கிய இலக்கண நூல்களோடு. மருத்துவம். சோதிடம். வானநூல். பூமிநூல். உடற்கூறு நூல்கள். வீட்டுக் குறிப்புகள், உடன்படிக்கைகள், அரச ஆணைகள். கொடைகள், பத்திரப் பதிவுகள். உரிமைச் சாசனங்கள் என அனைத்துமே ஓலைகளில் தான் கிடைக்கின்றன. அண்மையில் செங்கற்பட்டு. செங்கோட்டை. புதுக்கோட்டை. தஞ்சாவூர், குடந்தை ஆகிய ஊர்களிலிருந்து தமிழ்ப் பல்கலைக்கழகம் பெற்றுவந்துள்ள ஆவணச் சுவடிகள். நிலஅளவைகள், வரிவிதிப்பு முறைகள், கோயிற் கணக்குகள். அரசாங்க வருவாய் மற்றும் செலவுத் திட்டங்களைத் தாங்கிய பெருஞ்சுவடிகளாக - சுருணை நிலையில் உள்ளன. மூன்றடிக்கும் மேற்பட்டநீளமுள்ள அவை ஆவணக் களரிகளில் பாதுகாக்கப் பெற்றன. அவற்றுள் பல. ஓலைகளில் காலம் குறிக்கப்பட்டுள்ளது. கி. பி. 1740 முதல் 1775 வரையிலான கணக்குகளை அவை பெற்றுள்ளன. ஒவ்வொரு மாவட்ட ஆவணக் களரியிலும் கிட்டத்திட்ட ஒரு லாரி அளவிலான சுருணை ஓலைகள் இருந்திருக்கின்றன. அவற்றுள் பல ஆங்கில முத்திரைகளைப் பெற்றிருப்பது நோக்கத்தக்கதாகும். HUZUR RECORDS, TRIVANDRUM என்னும் எழுத்துடன் முத்திரைகளைப் பெற்றுள்ளன. சிலவற்றில் அந்த ஏட்டின் விலை காலணா. அரையணா. ஓரணா என்ற மதிப்பும் முத்திரையாகக் குத்தப்பட்டுள்ளது. இன்று பல்வேறு மதிப்புகளைப் பெற்றுப் பதிவுகளுக்குப் பத்திரங்களாகப் பயன்படும் தாள் பத்திரங்களைப் போன்றே அன்றும் அரசாங்கத்திடமிருந்து மதிப்புடைய முத்திரை ஓலைகளைப் பெற்றே ஆவணங்களை எழுதினர் பதிவு செய்தனர் என்பது உறுதியாகிறது. அத்துடன் காகிதம் எனும் தாளின் வருகைக்குப் பின்பும் தமிழகத்தின் எழுதுபொருளாக ஓலைச் சுவடியின் பயன்பாடு பெருக இருந்திருக்கிறது என்பதையும் உணரலாம். இதற்கு மற்றொரு சான்றாக. செங்கற்பட்டு மாவட்ட ஆவண ஓலைச்சுவடிகளைப் பார்த்து. பெர்னார்டு என்னும் பொறியாளர் ஆங்கில அரசுக்காகக் காகிதத்தில் எழுதிய குறிப்புகள். சுருக்கங்கள் அதே காலத்தைச் சார்ந்தவையாக இருப்பதைச் சென்னை ஆவணக் காப்பகத்தில்

காணலாம்.

கல்வியுடன் தொடர்புடைய தட்சிணாமூர்த்தி. பிரம்மா. கலைமகள் போன்ற பெருந்தெய்வங்களின் கைகளில் ஓலைச் சுவடிக்கட்டு இருப்பதைச் சிற்பங்கள் மற்றும். காகிதச்சுவடி ஆய்வுகள்

328