உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிற்ப நூல்களிலும் காணலாம். மாணிக்கவாசகர். கம்பர். திருவள்ளுவர் போன்ற புலவர் சிற்பங்களிலும் ஓலைச்சுவடி தவறாமல் இடம் பெற்றிருக்கும். இவை ஓலைச்சுவடி தமிழகத்தில் பெற்றிருந்த சிறப்பைக் காட்டுவன எனலாம். எனவே தொன்றுதொட்டு சென்ற நூற்றாண்டு வரை தமிழகத்தின் எழுதுபொருளாக ஆட்சி செய்தவை ஓலைகளே என்பதை உணரலாம்.

படித்தலும் படி எடுத்தலும்

ஓலைச் சுவடிகள் பெரும்பாலும் 300, 400 ஆண்டுக்காலமே வாழும் தகுதி படைத்தன. சுவடிகளின் ஆயுட்காலம் முடியுந்தறுவாயில் அவற்றைப் புதிய சுவடிகளில் படி எடுத்து எழுதிக் காப்பாற்றும் வழக்கம் உலகெங்கும் காணப்பட்ட முறையாம். காலங்காலமாகப் படி எடுத்துப் படி எடுத்துக் காப்பாற்றிய காரணத்தால்தான் தொல்காப்பியம். சங்க இலக்கியங்கள் போன்ற 2000 ஆண்டுகளுக்கு முந்திய நூல்களையும் நாம் பெறமுடிந்தது. படி எடுத்த விவரத்தைக் குறிப்பதும் பிற்குறிப்பில் அடங்குவதாகும். ஓலைச் சுவடிக்கட்டுகளின் தலைப்பு ஏட்டிலும் இறுதி ஏட்டிலும் சில குறிப்புகள் நூலுக்குப் புறம்பாகக் காணப்படும். அவை முற்குறிப்புகள் பிற்குறிப்புகள் எனப்படும். அக்குறிப்புகளில் பயனுள்ள பலவகைச் செய்திகள் காணப்பெறும். நூல். நூலாசிரியர். சுவடி உரிமையாளர். எழுத்தாளர் விவரம். காலக்குறிப்புகள். நூற்பயன் நூலகக் குறிப்பு. பிற அட்டவணை எனப்பல குறிப்புகள் இருக்கும். அத்தகு குறிப்புகளிலிருந்து. சுவடி படிக்கின்ற வழக்கம் போலச் சுவடிகளைப் படி எடுத்துப் பாதுகாக்கும். புதுக்கும் வழக்கம் இருந்தமையும் நாம் காணலாம். (அடைப்புக் குறி எண்கள். ஓலைச் சுவடித்துறைச் சுவடி எண்களாம்.)

“குப்பணன் நீதி ஒழுக்கம். செல்லப்பகவுண்டன் எழுதியது (1672) "விளம்பி வருஷம் ஆவணி மாதம் 7ம்தேதி ஞாயிற்றுக் கிழமையன்றைக்கு தாராபுரந் தாலுகா தம்பரெட்டிப்பாளையம் கிராமம் பாளையத்திலேயிருக்கும் பொன்னைய கவுண்டன் மகன் பெத்தாக்கவுண்டன் நீதி சாரம் எழுதி முடிந்தது" (1577).

'தென்கரைநாடு தூரம்பாடிக்கிராமம் நத்தப்பாளையம் பெரியணப்புலவன் மகன் சாமிப் புலவனுக்குப் படிக்கும்படி கொடுத்து வைத்தது" (1668)

"அடியேன் சுப்பிரமணியன் சுய ஹஸ்தலிகிதமாக அடங்கன் முறையும் சேத்திரக் கோவையும் எழுதி நிறைந்தன" (1927)

இது ஏழூரு புதுப்பட்டியிலிருக்கும் பட்டணசாமி வெங்கட்ராம செட்டியிடம் இருந்த பசும் பையை வாங்கிப் பார்த்து எழுதியது. ராசிபுரம் பருத்திக்கால் சீரங்க செட்டி சுவடி" (2270)

"பழைய புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினது" (558)

"சுப்பராய முதலியார் படிக்கின்ற தொட்டியம். எடுத்தவன் படித்துக் கொடுக்கவும் (679) திரௌபதை அம்மனானை, இதை காகிதச்சுவடி ஆய்வுகள்

329