உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆருவொருவர் எடுத்துப் படித்த பேரும் இந்தச் சுவடியிலே பிழை இருந்த இடத்திலே திருத்தவும் (766)

இவ்வாறு படி எடுத்து எழுதும் போது மூலச் சுவடியாக இருந்த சுவடியின் பெயரைக் குறிப்பிடுவதும் இது அதற்குச் சரியான படி நகல் என்றெல்லாம் குறிப்பிடுவதும் சில சுவடிகளில் காணலாம்.

பிங்கள வருடம் மார்கழிமாதம் 22ந்தேதி ஞாயிற்றுக் கிழமையிலான சுவடியைப் பார்த்து எழுதப்பட்ட தேதி குரோதன. வருடம் பங்குனி மாதம 2ம்தேதி எழுதி முடிந்தது" (8)

"அசலுக்குச் சரியான நகல் (2113)

இந்த நகல் எழுதினது மேற்படி கிராமத்திலிருக்கும் முகில் வண்ணம் பிள்ளை பேரன் பழநிக் குமாரப்பிள்ளை (2113)-

சுவடி எழுதுங்காலம்

இவ்வாறெல்லாம் சுவடிகளை எழுதுவதும். படி எடுப்பதும் எல்லாக் காலத்தும் நடந்ததாகக் கொண்டாலும் நூற்படிகளின் தேவை எழுந்த காலத்தும். பழைய சுவடிகள் அழிவுறும் நிலைக்குச் செல்லும் போதும் புதியபடிகள் உருவாக்கப்பெற்றன எனலாம். ஆடிப்பெருக்கு. கலைமகள் விழாக் காலங்களில் பழையனவற்றைக் கழிப்பதற்காகவும் புதிய சுவடிகளாக அவை படி எடுக்கப்பெற்றன. இவ்வழக்கமே நாளடைவில் அச்சு நூல்களைப் பார்த்தும் எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டன போலும். கல்விக்குக் காலமில்லை நேரமில்லை என்றாலும் தனிப்பட்டவரின் சூழல். காலத்தின் தட்பவெப்பநிலை போன்ற ஏதுக்களால் படிப்பதும் அதைச் சுவடியில் எழுதுவதும் வரையறைக்குட்பட்டுவிடுவதை நாம் காணமுடிகிறது. சுவடிகள் சிலவற்றில் காணப்படும் குறிப்புகள் சுவடி எழுதுவதற்கென்றே குறிப்பிட்ட சில மாதங்கள் ஒதுக்கப் பெற்ற சூழலைப் புலப்படுத்துகின்றன.

குறிப்பாக ஆவணி. புரட்டாசி. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் தமிழகத்தின் மழைக் காலமாகக் கருதமுடிந்தன. துறவியர் ஓரிடத்தே தங்கியிருந்து கல்வி கேள்விகளில் காலத்தைச் செலவிடுவர். தொடர் பயணங்களுக்கு இம்மாதங்கள் இடையூறாக இருப்பதே காரணம் எனலாம். ஆவணி அமாவாசை தொடங்கி ஐப்பசி வரை 'சாதுர்மாசம்' எனப்படும் விரதம் அந்தணர்களாலும், துறவிகளாலும் கொண்டாடப்படுகிறது. ஆவணி அமாவாசையில் வியாசபூசை செய்து வேதங்களைப் படிக்கத் தொடங்குகின்ற சடங்கை இன்றும் காணலாம். இச்சாதுர்மாசம் முழுவதும் அறிவு நூல்களை. வேதங்களைக் கற்பதில் செலவிட்டனர் நம் முன்னோர்

சமணத் துறவியரால் செய்யப்பெற்ற நூல்கள் அனைத்தும் இக்காலத்தில் தான் மலர்ந்திருக்க வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாகக் கிடைக்கின்றன. மழைக்காலத்தில் சிறுபூச்சிகளும், புழுக்களும் தோன்றுவது இடையூறாக இருக்கும் என்று நம்பிய அவர்கள், ஓரிடத்தே தங்கியிருந்து அறநூல்களைச் சொல்வதிலும், கல்வி கேள்விகளில் ஈடுபடுவதிலும் காலத்தைச் செலவிட்டிருக்கின்றனர்.

330

காகிதச்சுவடி ஆய்வுகள்