உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இத்தொகுதியில் காணப்படும் சமணநூல்கள் அனைத்தும் இச் "சாதுர்மாச" காலத்திலேயே சுவடியில் எழுதப்பட்டதாகக் காணப்படுகின்றன. சிலவற்றின் குறிப்புகளைக் காண்போம்.

"பராபவ வருஷம் கார்த்திகை மாதம் 16ம் தேதி ஆதி வாரம் ஏகாதசி நாழி 6. ப3/ 4இ .. எழுதி நிறைவேறியது"

அப்பாண்ட நாதர் உலா...(2006)

'பராபவ வருஷம் கார்த்திகை மாதம் 28ம் தேதி சஷ்டி 21//4 உத்திரம் 50 இந்த சுபத்தினத்தில் திருக்கோவிலூர் அதுகுடி வீரசோழபுரம் ராசப்ப நயினார் குமாரன் நல்ல தம்பி எழுதி நிறைவேறியது."

அடிமதிக் குடி அய்யனார் பிள்ளைத் தமிழ்.. (2020)

இன்னொரு சுவடி துறவி ஒருவரால் எழுதப்பட்டதாகவே காணப்படுகிறது. அச்சுவடியின் பிற்குறிப்பு. நூலின் தலைப்பு. சுவடி எழுதியவர். காலம் ஆகியவற்றைத் தெளிவுடன் சொல்லியிருக்கிறது.

"துன்மதி வருஷம் ஐப்பசி மாதம் 5ந்தேதி சனி வாரதினம் உத்திர நட்சத்திர தினத்தில் மேரு மந்திர மாலை பூர்த்தியாய்த் திருப்பறம்பூர் ஸ்வஸ்தி ஸ்ரீ தர்ம ஸாகர ஸ்வாமியால் எழுதி முடிந்தது"

மேருமந்திர மாலை. 2017

இவ்வாறெல்லாம் பலவாகப் படி எடுத்த சுவடிகளைப் போற்றிப் பாதுகாக்கவும் வளர்க்கவும் கவிராயர்களும் பிற புலவர்களும் துணை நின்றனர். சுவடிக் காப்பகங்கள் சரஸ்வதி பண்டாரம். பொத்தக. புஸ்தக சாலை எனும் பெயரில் அழைக்கப் பெற்றன. சுவடிக் காப்பகங்களிலும் கவிராயர் குடும்பங்களிலும் ஏராளமான சுவடிகள் காணப்பட்டன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் காகித காலத்தில் வாழ்ந்தவர். எனினும் அவர் கம்பராமாயணத்தை மூன்று முறை ஓலைச் சுவடியில் படி எடுத்து எழுதியதாகக் கூறுவர். சுவடிப் படிகள் பெருகி வளர்வதைப் புலவர்கள் எவ்வாறு வரவேற்றனர் என்பதற்கு இது பெருஞ்சான்றாகும்.

பெரியபுராணத்தில் சுந்தரர் அடிமை ஓலையைக் கிழித்த போது "இது மூல ஓலை இல்லை. வெறும் படி ஓலைதான் மூலஓலை என்னிடம் பாதுகாப்பாக உள்ளது” என்னும் வேதியர் கூற்றும் கையெழுத்து ஒப்பீட்டைப் பிற ஆவணங்களுடன் ஒப்பிட்டுக் காண்க என்னும் கூற்றும் படி ஓலைகளின் பரவலையும் இன்றியமையாமையையும் தெளிவுபடுத்துகின்றனவாம். எனவே. தமிழரிடம் தாம் பயிலும் எதனையும் படி எடுத்துப் பாதுகாப்பதும் பரப்புவதும் மரபாகப் போற்றப்பெற்றது புலனாம். அந்த வகையில் அச்சு நூல்கள் தோன்றிய பின்பும் ஒருநூலுக்குப் பல படிகளாகக் காகித அச்சு நூல்கள் தோன்றிய பின்பும் அவற்றைப் படியெடுக்கும் வழக்கம் இருந்ததைச் சில சுவடிகள் மூலம் காணலாம்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

331