உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாள் சுவடியும் அச்சுக் கலையும்

நூல்களைப் படியெடுத்துப் பிழைப்பு நடத்தும் தொழில் பரவலாகக் காணப்பட்டது. பயின்முறை எழுத்தரைவிடத் தொழின்முறை எழுத்தர் மிகுந்திருந்தனர் ஆதலின் ஐரோப்பிய நாடுகளில் அச்சுக்கலை மலர்ந்தபோது படி எடுப்போரின் தொழில் பாதிப்படையும் என்பதால் அச்சுக்கலை பேயின் வேலை என்று தடுத்தனர். ஆயின் தமிழகத்தில் தொழில்முறை எழுத்தர் இருந்தநிலையிலும் அச்சுக் கலையை வரவேற்றனர்.

இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழியில்தான் முதன்முதலாக அச்சு நூல் வெளியானது தரங்கம்பாடியும் காகித ஆலை நிறுவப்பட்ட பொறையாறும் இந்தியக் காகித வரலாற்றில் முதலிடம் பெறுவன எனலாம். 1557இல் கொல்லத்தில் அச்சான தம்பிரான் வணக்கம் 1715இல் பொறையாறில் காகித ஆலை நிறுவப்பட்டது இதனை நிறுவும் தொடர்ந்து பல நூல்கள். 1806இல் கொடுத்தமிழ். 1812இல் திருக்குறள். நாலடியார். 1811இல் தமிழ் விளக்கம். 1824இல் சதுரகராதி. 1830இல் நீதிநெறி விளக்கம் எனத்தொடர்ந்து நூல்கள் அச்சாகி வளர்ந்தன. அச்சுப்பொறிக்கு முன்பே காகிதம் வந்துவிட்டது. சீனாவில் மலர்ந்த காகிதம் அரேபியர்களால் 11ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகமானது. என்றாலும் சீகன்பால்கு அவர்கள் 1715 இல் பொறையாறில் ஆலைநிறுவிய பின்பே பெருக வழக்கத்திற்கு வந்தது. என்றாலும் காகித வரவுக்குப் பின்பும் தமிழர்கள் தொடர்ந்து ஓலைகளில் எழுதுவதையும். படியெடுப்பதையும் மேற்கொண்டனர். வீரமாமுனிவர் போன்றோரும் ஓலைகளில் எழுதிப் பாதுகாக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் (1815 - 1876) தம் கவிதைகளை ஒலைகளிலேயே எழுதுவதற்கு ஆட்களைப் பணியமர்த்தியிருந்தார். அவரே கைப்பட எழுதிய சுவடிகள் பலவாகும் ஆயின் அக்காலத்து வாழ்ந்த இராமலிங்க அடிகளார் ஓலைகளைவிடத் தாள் சுவடிகளிலேயே பெரும்பாலானவற்றை எழுதிவந்தார். ஆனால் அவருக்குப் பிறகும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898) ஒரு இலட்சம் பாடல்களுக்கும் மேலாக ஓலைச் சுவடிகளிலேயே எழுதி வந்தார்.

1820ஆம் ஆண்டுகளில் இலங்கை ஆளுநர் அவர்கள் பாதிரிமார்களின் வெளியீடுகளைத் தடை செய்தபோது. பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு தொழில்முறை எழுத்தர்களைக் கொண்டு தம் பிரசாரங்களை வெளியிட்டனர் அப்பாதிரிமார்கள். இவ்வாறே பலயிடங்களிலும் காகிதங்களில் பக்கம் பக்கமாகப் படியெடுத்து தம் நூல்களைப் பரவச் செய்தனர். இது ஓலைகளைப் படியெடுப்பது போல அமைந்தது. வீரமாமுனிவர் சதுரகராதி 1824இல் வெளிவந்தது. அந்நூலை ஓலைகளில் படியெடுத்துப் படிக்கும் வழக்கம் தொடர்ந்தது. இவ்வாறு காகிதமும் அச்சும் தோன்றி வளர்ந்த பின்பும் ஓலைகளின் பயன்பாடு தொடர்திருந்தமையை நாம் உணர முடிகிறது. எனினும் மிகப் பரவலாக அச்சு நூல்கள் தோன்றிய பின்பும் ஒலைச் சுவடிகள் படி எடுக்கப் பெற்ற செய்தி வியப்பாக இருக்கிறது.

அச்சு நூல்களுக்குப் பின்பும் ஓலைச் சுவடிகள்

அச்சுப் பொறியும் அச்சு நூல்களும் தோன்றிய பின்பும் ஓலைச் சுவடிகளின் பயன்பாடு இந்தியாவில் பெருக இருந்தது. தமிழகத்திலும் ஓலைச் சுவடிகளில் காகிதச்சுவடி ஆய்வுகள்

332