உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுதியும். படித்தும் பாதுகாக்கும் வழக்கம் தொடர்ந்தது. சிறப்பாக. அச்சான நூல்களை அச்சுப் புத்தகங்களைப் பார்த்து மீண்டும் ஓலையில் எழுதிப்படிக்கும் வழக்கம் இருந்ததைச் சில சுவடிகளின் பிற்குறிப்புகள் முற்குறிப்புகள் புலப்படுத்துகின்றன

கைவல்யநவநீதம்' என்னும் சுவடியில்.

"இது கொளத்தூர் வயித்தியலிங்கம் பிள்ளையவர்கள் கேட்டுக் கொண்டபடி பொய்கைப்பாக்கம் வீராசாமி முதலியாரவர்கள் இளைய சகோதரராகிய அப்பாசாமி முதலியாரால் தமது வித்துவரக்ஷாமிர்த அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.

குரோதி வருஷம் பங்குனி மாதம். இதன் விலை 5 3/4 மேற்படி அச்சுப் பொத்தகத்தைப் பார்த்துக் கோரிப்பாளையம் பாக்கிய முதலியார்க்காக மதுரை ராமாயணச் சாவடிக் கணக்குத் தவசிக் கோன் மகன் தேவேந்திரன் எழுதியது. பராபவ வருஷம் மார்கழி மாதம் 20ம்தேதி (1778)"

என்னும் குறிப்பு காணப்படுகிறது. இது அச்சு நூலைப் பார்த்து எழுதிய விவரத்தைத் தெளிவாகக் குறிப்பிடுதல் நோக்கத்தகுவதாம்.

சூடாமணி நிகண்டு (1840) என்னும் சுவடியில்.

"இஃது பொய்கைப் பாக்கம் ஹரிஹர புத்ர உபாத்தியாயரவர்கள் குமாரராகிய அப்பாசாமி முதலியாரவர்களால் தமது வித்வரக்ஷாமிர்த அச்சுக் கடத்தில் பதிப்பிக்கப்பட்டது. குரோதி வருஷம் மாசி மாதம். இதன் விலை 3"

என்று காணப்படும் குறிப்பினால் மேற்படி சுட்டிய செய்திகள் உறுதி செய்தல்

காணலாம்.

செங்குந்தர் சரித்திரச் சுருக்கம் என்னும் சுவடியின் பிற்குறிப்பு. "இது மயிலை இலட்சுமண சுவாமி முதலியாரால் வர்த்தமான தரங்கிணி அச்சுக் கடத்தில் பதிப்பிக்கப்பட்ட செங்குந்தர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலின் முகவுரை. அச்சு நூலைப் பார்த்து உலகுடையா பாளையம் அருணாசல முதலியார்குமாரன் ஆறுமுகக் கவிராயர் எழுதியது (2046)"

என்று காணப்படுகிறது. அச்சகத்தின் பெயரையும் இது சுட்டுதல் காணத்தகுவதாம் மற்றொரு சுவடி கதித்த மலை முருகன் பதிகம் (2057) இக்குறிப்பை முற்குறிப்பாகவே தருகிறது.

'ஊற்றுக்குழிக் கதித்தமலை முருகன் மீதில் பதிகம் சிந்து, இஃது கொங்கு தேசத்தில் குறும்பு நாடு விசயமங்கலம் குருஸ்தானம் மடாதிபராகிய கூனம்பட்டி மாணிக்கவாசக சுவாமிகள் சிஷ்யரான மேற்படி நாட்டுக்கு அதிபரான படைத்தலை காகிதச்சுவடி ஆய்வுகள்

333