உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேளாளர் ஐவரில் நான்காவது கோயமுத்தூர் சில்லா ஈரோட்டுத் தாலுக்கா தேவஸ்தானம் கமிட்டி மெம்பரில் ஒருவராகிய கம்புளியம் பட்டிக் கிராம மணியம் சின்னரங்கையக் கவுண்டர் குமாரன் மணியம் நாகப்ப கவுண்டனால் இயற்றப்பட்டு கூனம்பட்டிக் கிராம முன்சீப் தர்மகர்த்தராகிய வில்லேஜ் மாஜிஸ்திரேட் குழந்தை கவுண்டன் கேட்டுக் கொண்டபடிக்குச் சென்னை கலாநிதி அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. பல வருஷம் தை மாதம்"

இக்குறிப்பு பதிப்பாசிரியர். நூலாசிரியர் வம்ச வரலாற்றையே தருவதைப் போன்ற விரிவைக் கொண்டதாகும். கிட்டத்தட்ட இதுபோன்ற வரலாற்றுடன் காணப்படுவது தெய்வயானை ஏசல் (2059) என்பது.

"எட்டி குடி ஏசல் என்று வழங்குகின்ற தெய்வானை ஏசல். இஃது களத்தூர் தமிழ்ப்புலவர் வேதகிரி முதலியார் குமாரர் ஆறுமுக முதலியாரால் பரிசோதித்துத் தக்கோலம் நரசிம்முலு நாயகர் அவர்களது விவேக சந்த்ரோதய அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது"

நாடகசாலை தீக் கோள் கும்மி (2060) என்னும் சுவடி அச்சு நூலின் விலையைக் கூடப் பதிவு செய்து காட்டுகிறது.

"இஃது திருநெல்வேலி பூ. குல்வீர ராமப் பெருந் தெருவில் இருக்கும் பழனியாண்டி முதலியார் குமாரர் பிச்சைக் கண்ணு முதலியார் அவர்கள் இயற்றியது. மேற்படியூர் வி. சா. முகம்மது கண் ராவுத்தர் கேட்டுக் கொண்டபடி கலைக்கியான விளக்க அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதன் விலை அணா 2. 1886-ஆம் வருஷம்."

திருக்குறள் அறத்துப்பால்) நூலும் உரையும் கொண்ட சுவடி ஒன்று (860) மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிட்டும் இரட்டை ஒற்றைக் கொம்புகளிடையே மாற்றம் காட்டியும், பகர வளைவு பிறைவளைவு. உடுக்குறி புள்ளடிக்குறி போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தியும் எழுதப் பெற்றுள்ளது. இது பெரும்பாலும் அச்சு நூலொன்றைப் பார்த்து எழுதியதாகத் தோன்றுகிறது. சில சுவடிகளில் அச்சு நூலைப் பார்த்து எழுதிய குறிப்பும் காணப்படுகிறது. இந்த ஏடு அச்சுப் புத்தகத்தைப் பார்த்து எழுதியதாகும். அமிர்த வாசகம் 723) என்ற குறிப்பைக் கொடுத்துவிட்டுக் கீழ்க்காணும் விளம்பரத்தையும் சேர்த்து எழுதியிருக்கின்றனர்.

334

"விளம்பரம் இந்த சாத்திரம் செலவான பிறகும் இந்நூலாசிரியர் உத்தரவின்றி யாராவது அச்சிட்டாலும் அப்படி அச்சிட்டதை விலை வைத்து விற்பனை செய்தாலும் இவர்கள் மேற்சொல்லிய ஆசிரியர் முதலியவர்கள் சாபத்திற்குள்ளாகாமற் போகார்களென்று உறுதியாய்க் கூறலாகின்றது. இப்படிக்கு ஸ்ரீரங்கம் வீரராகவ கிருஷ்ணதாசன். இந்த புத்தகம் பெருமாள் காகிதச்சுவடி ஆய்வுகள்