உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேட்டை கோவிந்தராஜநாயகரால் அச்சடுக்கி பிரசுரஞ் செய்யலாயிற்று."

இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது சில கருத்துக்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதை உணரலாம்

1. காகிதப் பெருக்கம் பரவிய போதும் மரபை மாற்றாநிலை தொடர்ந்திருக்கும். 2. காகிதத்தின் விலை ஓலைகளை விடக் கூடுதலாயிருந்திருக்கும்.

3. காகிதத்தில் அச்சிட்ட நூற் படிகள் தேவைக்கேற்ப இருந்திரா.

4. காகிதத்தின் வாழ்நாள் நம்பிக்கையூட்டும்படி அமையவில்லை. 5.ஓலைகளில் எழுதினால் அவை 300, 400 ஆண்டுகளுக்காவது வாழும் என்னும் பட்டறிவு.

6. ஓலைச் சுவடிகளுக்குக் கொடுக்கப்பட்ட தெய்வாம்சம்.

இத்தகு எண்ணங்களால் காகித நூல்களை மீண்டும் பழைய மரபில் ஓலைகளில் எழுதிப் படித்தனர் போலும். இத்தகு நூல்களையும் அவற்றின் படி ஓலைகளையும் தொகுத்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்தால் மேலும் தெளிவு பெறுதல் கூடும். சுவடி ஆய்வாளர் இத்தகு ஆய்வுகளிலும் முற்படுவாராக.

335

காகிதச்சுவடி ஆய்வுகள்