உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மோ. கோ. கோவைமணி

ஆய்வு உதவியாளர் ஓலைச்சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

அமுதத்தில்

காகிதச் சுவடிப் பதிப்புகள்

பருவ இதழ்களில் பனையோலைச் சுவடிப் பதிப்பு நூல்கள், காகிதச் சுவடிப் பதிப்பு நூல்கள், நிகழ்கால நூலாசிரியரின் நூல்கள் என மூன்று நிலைகளில் நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் இதழ்களின் வரலாறு கி. பி. 1812இல் தொடங்குகிறது. அதுமுதற்கொண்டு இதுநாள்வரை பல்வேறு வகையான இதழ்கள் வெளிவந்தும்; வெளிவந்துகொண்டும் இருக்கின்றன. பருவ இதழ்களில் காகிதச் சுவடிப் பதிப்பின் வரலாறு கி. பி. 1849இல் தொடங்குகிறது. நற்போதகம் (1849) எனும் மாத இதழில் 'இரட்சணிய யாத்திரீகம்' என்ற காப்பிய ஆண்டுகள் தொடராக வெளிவந்துள்ளது. இது தொடங்கிப் பல பருவ இதழ்கள் காகிதச் சுவடிப் பதிப்பு நூல்களை வெளியிட்டும் வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க பருவ இதழ் 'மாதாந்திர அமுதம்' ஆகும்.

மாதாந்திர அமுதம்

2014

கோவை, சின்னவேடன்பட்டி கெளமார மடத்தின் வெளியீடே 'மாதாந்திர அமுதம்' எனும் பருவ இதழாகும். இவ்விதழ் கி. பி. 1980ஆம் ஆண்டு சூலை மாதம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. திசம்பர் மாதம் 1999ஆம் ஆண்டு வரை இவ்விதழில் 20 குடங்களும் (தொகுதி) 6 திவலை (பகுதி) களும் ஆக 246 திவலைகள் வெளிவந்துள்ளன. டி. என். சுகி சுப்பிரமணியம் குடம் 7 திவலை 9 வரைக்கும் இதழாசிரியராக இருந்துள்ளார். அதன்பிறகு இவரது மகன் சுகி. சிவம் குடம் 9 திவலை 10 முதல் ஆசிரியராக இருந்து வருகின்றார். முதல் பதினைந்து குடங்களுக்குத் தவத்திரு சுந்தர சுவாமிகளும் 16ஆவது குடம் முதல் தவத்திரு குமரகுருபர சுவாமிகளும் சிறப்பாசிரியராகப் பணியாற்றி வருகின்றனர்.

மாதாந்திர அமுதம் ஒரு சமய இலக்கியப் பருவ இதழாகும். இதில் ஆய்வுக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், பொதுக் கட்டுரைகள், ஒரு நூல் தொடர்பான தொடர் ஆய்வுக் கட்டுரைகள். மூல நூல்கள் ஓலை மற்றும் காகிதம்). மூல நூல் உரைகள். மூலமும் உரையும். மூல நூலின் கதைச் சுருக்கங்கள், சிறுகதைகள். நாடகங்கள். குழந்தை இலக்கியங்கள். தலவரலாறுகள், மடத்து விழாச் செய்திகள். சிறப்பாசிரியர் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் எனப் பலநிலைகளில் இப்பருவ இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.

336

காகிதச்சுவடி ஆய்வுகள்