உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மாதாந்திர அமுதத்தில் நூல்கள்

மாதாந்திர அமுதத்தில் வெளியான நூல்களை ஐந்து நிலைகளாகப்

பிரிக்கலாம். அவை.

1. பனையோலைச் சுவடிப் பதிப்பு நூல்கள்

2. காகிதச் சுவடிப் பதிப்பு நூல்கள்

3. நிகழ்காலப் புலவர்களின் நூல்கள்

4. திருமுறை நூல்கள்

5. பிற பதிப்பு நூல்கள்

என அமையும். இவ்வெல்லாவற்றையும் நோக்கின் ஆய்வு விரியும். எனவே. காகிதச் சுவடிப் பதிப்பு நூல்கள் மட்டும் இவண் ஆய்வுப் பொருளாக அமைகிறது. மாதாந்திர அமுதத்தில் காகிதச் சுவடிப் பதிப்பு நூல்கள்

தவத்திரு இராமானந்த சுவாமிகள் மற்றும் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் ஆகியோரின் நூல்கள் இப்பிரிவில் அடங்குவன ஆகும். இவ்விருவரும் எழுதிய காகிதப் படிகள் இன்றும் கோவை கௌமார மடத்தாரால் பாதுகாக்கப் பெற்று

, தவத்திரு இராமானந்தரின் சண்முகமாலை மற்றும் இராமானந்தத் திரட்டு

ஆகிய இரண்டு நூல்களும் : தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் கருணாம்பிகை யமக அந்தாதி. அறநெறிவெண்பா. ஈச்சநாரி விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி. ஈச்சநாரி விநாயகர் பதிகம். தண்டபாணிமாலை. தண்டபாணி சுவாமிகளது சரித்திர சார வண்ணம். குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழ். பக்தமான்மியத்தில் 'கபீர்தாச கதி'யில் ஒருபகுதி மற்றும் போசலபாவா கதி. கோவை இராமநாதபுரம் விநாயகர் பதிகம். பேரூர் ஸ்ரீ அகிலாண்ட நாயகி பதிகம். வெள்ளக்கிணற்று வள்ளிநாயகன் பதிகம். காரமடை ஆண்டாள் பதிகம். கீரநத்தம் விநாயகர் பதிகம். கீரநத்தம் விநாயகர் திருப்புகழ் போன்ற நூல்கள் மாதாந்திர அமுதத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் நூல்களை மட்டும் இப்பகுதி ஆராய்கிறது.

தவத்திரு கந்தசாமி சுவாமிகள்

கி.பி.18.04.1892ஆம் நாளன்று வெங்கடசாமிக் கவுண்டருக்கும் குட்டியம்மைக்கும் தவப்புதல்வராக இவர் அவதரித்தார். கந்தசாமி எனப் பெயர் சூட்டினார் தவத்திரு இராமானந்த சுவாமிகள். இவர் தொட்டையக் கவுண்டரின் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். சிறுவர் கந்தசாமி. கல்வியில் சிறந்து விளங்கினாலும் இளமையிலேயே தம் பெற்றோர்களை இழந்தார். உலகின் நிலையாமை அவர் உள்ளத்தில் ஆழப்பதிந்துவிட்டது. அதனால் சிறுவயதிலேயே ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுவிட்டார். சிறுவயதிலேயே கோவை சின்னவேடன் பட்டியில் தவத்திரு இராமானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டு நடத்தி வந்த கௌமார மடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார். அதுமுதற் கொண்டு தவத்திரு இராமானந்தரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டு ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் தமது சொத்துக்களையும் திருமடத்திற்குக் கொடுத்துவிட்டார். பிறகு 29.01.1923ஆம் காகிதச்சுவடி ஆய்வுகள்

337