உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாளன்று தவத்திரு இராமானந்த சுவாமிகளால் துறவு பெற்று. கெளமார மடத்தின் இரண்டாவது சந்நிதானமாகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னும் பின்னும் தமது குருவான தவத்திரு இராமானந்தரின் கட்டளைப்படிப் பலப்பல நூல்களை எழுதியுள்ளார் இவர் இயற்றிய மொத்தச் செய்யுட்கள் 14.481 என்று கோவை கௌமார மடத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இச்செய்யுட்கள் எல்லாம் அங்குப் பாதுகாக்கப்பெற்று வருகின்றன. 10. 12. 1948ஆம் நாளன்று கந்தவேலைப் போற்றிய தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இறைவனடி ஒன்றரக் கலந்தார்.

இவர்தம் நூல்களின் பட்டியலைச் சிரவையாதீனம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் வரலாறு' எனும் நூலின் பிற்சேர்க்கை 1இல் விவரமாகத் தரப்பெற்றுள்ளது. மேலும் இவரைப்பற்றிப் பிறர் பாடிய நூல்களின் பட்டியலை இதே நூலின் பிற்சேர்க்கை 2இல் தரப்பெற்றுள்ளது. இந்நூல்களில் பெரும்பான்மை கௌமார சபை வெளியீடாகப் பலநிலைகளில் அச்சாகியுள்ளன. தனி நூலாக மட்டுமல்லாமல் கௌமாரசபை வெளியீடான 'மாதாந்திர அமுதத்'திலும் இவர்தம் நூல்கள் பல வெளிவந்துள்ளன.

தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் நூல்கள்

மாதாந்திர அமுதத்தில் தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் நூல்களை இரண்டு நிலைகளாகப் பகுத்து ஆராயலாம். அவை.

1. தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இயற்றிய நூல்கள்

2. தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பற்றிய நூல்கள்

என்பனவாகும்.

1) தவக்கிரு கந்தசாமி சுவாமிகள் இயற்றிய நூல்கள்

தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் கருணாம்பிகை யமக அந்தாதி. தண்டபாணி சுவாமிகளது சரித்திர சார வண்ணம். ஈச்சநாரி விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி. தண்டபாணி மாலை. பக்த மான்மியத்தில் 'கபீர்தாச கதியில் ஒரு பகுதி மற்றும் போசலபாவா கதி. குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழ், சிரவை சற்குரு பதிகம், மகாலக்குமி பதிகம். ஈச்சநாரி விநாயகர் பதிகம். கோவை இராமநாதபுரம் விநாயகர் பதிகம், பேரூர் ஸ்ரீஅகிலாண்டநாயகி பதிகம். வெள்ளக்கிணற்று வள்ளிநாயகன் பதிகம். காரமடை ஆண்டாள் பதிகம், கீரநத்தம் விநாயகர் பதிகம். கீரநத்தம் விநாயகர் திருப்புகழ் போன்ற நூல்கள் மாதாந்திர அமுதத்தில் வெளிவந்துள்ளன

அ) கருணாம்பிகை யமக அந்தாதி

கொங்கு நாட்டில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்கள் ஏழில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது அவிநாசி என வழங்கும் திருப்புக்கொளியூர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை உண்ட பாலகனை எழுப்பிய சிறப்பமைந்தது. கருணாம்பிகை பாதிரி மரத்தின்கீழ்த் தவம் புரிந்து வலப்பாகம் பெற்றது. பலரால் பூசித்துப் பெரும்பேறு பெற்றது. இத்தலப்பெருமையினையும் இத்தலத்தில் வீற்றிருக்கும் கருணாம்பிகை காகிதச்சுவடி ஆய்வுகள்

338