உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அம்மையையும் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் யமக அந்தாதியாக 30 பாடல்கள் பாடியுள்ளார் இதற்குச் சிரவையாதீனப் புலவர் ப. வெ. நாகராசன் உரை எழுதியுள்ளார். இவ்வுரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 9 திவலை 2.3. 4. 5. 6களில் முதல் 29 பாடல்கள் மட்டும் வெளிவந்துள்ளன இறுதிப்பாடல் வெளிவரவில்லை இந்நூல் 1988ஆம் ஆண்டு தனி நூலாக அச்சாகியுள்ளது. இதிலும் 29 பாடலும் அதற்கான உரையும் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக உரையாசிரியரை நேரில் (30-11-1999) கேட்டபோது.

“குடம் 9 திவலை 7இல் இறுதிப்பாடலும் அதற்கான உரையும் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால். அதில் வெளிவர வில்லை. பின்னர்த் தனி நூலாக வெளிக்கொணரும்போது அமுதத்தில் வெளிவந்த 29 பாடல்களை மட்டும் அச்சிட்டு நூல் முற்றும் எனப் போட்டுவிட்டார்கள்"

என்கிறார். அடுத்த பதிப்பு வரும்போது 30ஆவது பாடலையும் அதற்கான உரையையும் சேர்த்து வெளியிடல் சாலச்சிறந்ததாகும்.

ஆ) தண்டபாணி சுவாமிகளது சரித்திர சார வண்ணம்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றின் நிகழ்ச்சிகளைத் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் 'சரித்திர சார வண்ண'மாகப் பாடியுள்ளார். தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் வண்ணத்திரட்டில் இதுவொரு பகுதியாக மூலம் மட்டும் இடம்பெற்றுள்ளது (1929). சிரவையாதீனப் புலவர் இல. பழனிச்சாமி உரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 9இன் திவலை 9- 12களிலும், குடம் 10 திவலை 1-7களிலும் வெளியாகியுள்ளது. இந்நூல் பதப்பிரிப்பு. அருஞ்சொற்பொருள். பொழிப்புரை என்றவாறு உரையமைப்பு அமைந்துள்ளது. இவ்வண்ணப்பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதை இதன் உரையாசிரியர் கூற்றால் உணரலாம். அவை.

"அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் முன்னாள் சேதுபதி சமஸ்தானத்தில் ஒரு கலை மட்டும் பாடிய மகாவல்லபமான இந்தச் சந்தக்குழிப்பு. வடலூர் திருவருட்பிரகாச வள்ளலாரால் பாராட்டிய பெருமிதம் பெற்றது. இந்தச் சந்தக்குழிப்பை வைத்துக்கொண்டு மிகச் சாதுரியமாகச் சிரவை மகாசந்நிதானம் அருள்மிகு கந்தசாமி சுவாமிகள் மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் சரித்திர சார விண்ணப்பமாக எட்டுக்கலைகள் அமைத்து அருளிச் செய்த இந்த வண்ணப்பாடல்"

எனக் குறிப்பிடுகின்றார்.

(மாதாந்திர அமுதம். குடம் 7 திவலை 9, ப. 14)

ஈச்சநாரி விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி

கோவை மாநகரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் கலையழகு மிளிரத் திருவருட் பொலிவுடன் விளங்குவது ஈச்சநாரி அருள்மிகு விநாயகர்

காகிதச்சுவடி ஆய்வுகள்

339