உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருக்கோயில், தேங்காய் உடைப்பாரைத் தேங்காது காத்தருளும் பெருமான் ஈச்சனாரி விநாயகர். பாண்டி மண்டலத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர் போலக் கொங்கு மண்டலத்தில் ஈச்சநாரி விநாயகர் விளங்குகின்றார். இவ்விநாயகர் பேரில் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி பாடியுள்ளார். இந்நூல் பத்துப் பாடல்களுக்கு ஒரு யாப்பாகப் பத்து வகையான யாப்பில் அமைத்துப் பாட்டின் அந்தத்தில் வரும் சொல்லே அடுத்த பாடலின் முதல் சொல்லாக வருவதே இந்நூலின் யாப்பமைதி. இந்நூல் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர் விருத்தம். எழுசீர் விருத்தம். அறுசீர் விருத்தம். கலிவிருத்தம், கொச்சகக் கலிப்பா. கலித்துறை போன்ற பா வகைகளாலானது. இந்நூலின் 100 பாடல்களும் மாதாந்திர அமுதத்தில் குடம் 13 திவலை 12லும்: குடம் 14 திவலை 1-6களிலும் வெளிவந்துள்ளன.

ஈ) தண்டபாணி மாலை

-

ஆறுபடைவீடும். ஆறு திருமுகமும். ஆறெழுத்து மந்திரமும், ஆறாவது திதியாகிய சஷ்டியும். ஆறு பெண்களுக்குரிய கார்த்திகை நட்சத்திரமும், ஆறாவது கிழமையாகிய வெள்ளிக்கிழமையும் தனக்கு உரியதாகக் கொண்ட திருமுகப் பெருமானுக்கு ஆறுஆறு முப்பத்தாறு என்று வண்ணச்சரபர் பாடிய படைவீட்டுத் திருப்புகழைப் போல் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்மீது 37 விருத்தப் பாவால் பாடப்பெற்றதே தண்டபாணி மாலை எனும் நூல். இதன் முதல் இரண்டு அடிகள் தோத்திரமாகவும் அடுத்த இரண்டு அடிகள் கந்தபுராண வரலாறாகவும் ஒவ்வொரு பாடலும் அமைந்துள்ளது. மூன்று முறை இந்நூல் இதற்குமுன் தனிநூலாக வெளிவந்துள்ளது என்றாலும் மாதாந்திர அமுதத்தில் குடம் 14 திவலை 7இல் முதல் 15 பாடல்கள் மட்டும் அச்சாகியுள்ளது. இதற்குமேல் உள்ள பாடல்களைப் பற்றி இவ்விதழில் அறியமுடியவில்லை.

உ) பக்த மான்மியம்

வடமொழியில் சந்திரதத்தரால் இயற்றப்பெற்ற பக்தமாலா (வைணவ. சாத்தேய. சைவ பக்தர்களது சரித்திரம்வில் வைணவ அடியார்களின் வரலாறுகளைத் தமிழில் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இயற்றியுள்ளார். இதில் வடநாட்டு வைணவ அடியார்கள் 98பேரும் தென்னாட்டு வைணவ அடியார்கள் 6பேருமாக ஆக 104 அடியார்களின் வரலாறுகளைத் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் 7307 செய்யுட்களாக முறையே பக்தமான்மியம். பக்தமான்மிய அனுபந்தமாகப் பாடியுள்ளார். இதில் 'கபீர்தாச கதி'யில் ஒருபகுதியும், போசலபாவா கதியும் மட்டும் மாதாந்திர அமுதத்தில் இடம்பெற்றுள்ளன.

கபீர்தாச கதி : பக்தமான்மியத்தில் 51ஆவது கதியாக இடம்பெற்றிருப்பது கபீர்தாச கதியாகும். இது 200 பாடல்களைக் கொண்டது. தாய் மதமான இஸ்லாம் மதத்தைத் துறந்து வைணவ மதத்தைத் தொழுதவர் கபீர்தாசர். இதனால் டில்லி பாதுஷாவிடம் இன்னல்கள் பல பெற்றவர் ஆயினும் இறுதியில் பாதுஷா மனம் திருந்த வழி வகுத்தவர் இவர், இவர்தம் வரலாற்றின் சில பகுதிகள் (பக்தமான்மியப் பாடல் எண் 154-160) மட்டும் தவத்திரு மருதாசல சுவாமிகளால் உரை (பதப்பிரிப்பு. பொழிப்புரை) எழுதப்பட்டு மூலமும் உரையுமாக மாதாந்திர அமுதத்தில் குடம் 12 காகிதச்சுவடி ஆய்வுகள்

340