உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திவலை 12இல் வெளிவந்துள்ளது.

போசலபாவா கதி : பக்தமான்மிய அனுபந்தத்தில் முதலாவது கதியாக இடம்பெற்றிருப்பது போசலபாவா கதி'யாகும்: இது 125 பாடல்களைக் கொண்டது. வேளாளர் குலத்தில் பாண்டுரங்கக் கடவுள் வீற்றிருக்கும் பண்டரிபுரத்திற்கு அருகே உள்ள பால்காட்டூரில் பிறந்தவர் போசலபாலா. இவருக்கு மாண்கோபோதல் எனும் மற்றொரு பெயரும் உண்டு. திருமால் திருவடிகளை வணங்கி அடியவர்களுக்கு வறுமை வந்தபோழ்தும் அன்னதானம் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டவர். இந்நூலுக்குத் தவத்திரு மருதாசல சுவாமிகள் உரை எழுதியுள்ளார். இவ்வுரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 15 திவலை 8. 9. 11. 12களிலும்: குடம் 16 திவலை 2.3.4களிலும் வெளிவந்துள்ளது.

இவ்வுரையாசிரியர் (மருதாசல சுவாமிகள்) பக்தமான்மியத்தில் இடம்பெற்றிருக்கும் அடியவர்களின் கதைச் சுருக்கத்தினை மாதாந்திர அமுதத்தில் கடந்த 18 மாதங்களாகத் (திசம்பர் 1999 வரை) தொடர்ந்து எழுதி வருகின்றார். ஊ) குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழ்

குருந்தமலையில் வீற்றிருக்கும் குழந்தை வேலாயுதசாமி மீது தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் பாடப்பெற்றதே குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழ் எனும் நூல். இந்நூல் விநாயகர் மற்றும் சற்குரு துதியோடு பருவத்திற்குப் பப்பத்துப் பாடல்கள் வீதம் 102 பாடல்களால் ஆனது. முருகப்பெருமானின் திருவிளையாடல்களைப் பிள்ளைத்தமிழாகப் பாடப் பெற்றுள்ளது. இதற்குத் தவத்திரு மருதாசல சுவாமிகள் உரை எழுதியுள்ளார். இந்நூல் மூலமும் உரையுமாக மாதாந்திர அமுதத்தில் குடம் 16 திவலை 9-12களிலும்: குடம் 17 திவலை 1.3.5.6, 8, 9, 10களிலும் வெளிவந்துள்ளது. இந்நூல் தனி நூலாகவும் அச்சிடப்பெற்றுள்ளது.

எ) அறநெறி வெண்பா

கொல்லாமை மற்றும் உலக மாந்தர்தம் இயல்புகளை 20 வெண்பாக்களில் தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் பாடப்பெற்றதே அறநெறி வெண்பா. இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 13 திவலை 10இல் வெளிவந்துள்ளது.

ஏ) பதிகங்கள் மற்றும் திருப்புகழ்

தவத்திரு கந்தசாமி சுவாமிகள் 150க்கும் மேற்பட்ட பதிகங்களையும் பதிகம் பாடிய தலங்கள்தோறும் திருப்புகழ்களையும் பாடியருளியவர். இவர்தம் பெரும்பான்மையான பதிகங்களும் திருப்புகழ்களும் அச்சு வடிவம் கண்டுள்ளன. எனினும் சில பதிகங்களும் திருப்புகழ்களும் மாதாந்திர அமுதத்தில் மூலமாகவும் மூலமும் உரையுமாகவும் வெளிவந்துள்ளன. அவை பின்வருமாறு:

ஈச்சநாரி வீநாயகர் பதிகம் : முன்னர்க் குறிப்பிட்ட ஈச்சநாரி விநாயகப் பெருமான்மீது தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பதிகம் ஒன்றும் பரீடியுள்ளார். விநாயகப் பெருமானின் பெருமைகளைக் கூறித் தன்னை எவ்வாறெல்லாம் வைத்துக் காக்க வேண்டும் என்ற விண்ணப்பங்களுடன் இப்பதிகம் பாடப்பெற்றுள்ளது. காப்பு காகிதச்சுவடி ஆய்வுகள்

341