உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வெண்பா ஒன்றுடன் 13 கட்டளைக் கலித்துறையினாலான இந்நூலுக்குச் சிரவையாதீனப் புலவர் ப. வெ. நாகராசன் உரை எழுதியுள்ளார் (பொழிப்புரை. குறிப்புரை). இவ்வுரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 19 திவலை 8,9 களில் வெளிவந்துள்ளது.

சிரவை சற்குரு பதிகம் : சிரவையாதீன முதல்வர். சிரவையாதீன முதல் குருமகா சந்நிதானமான தவத்திரு இராமானந்த சுவாமிகளின் பெருமைகளைப் பாடுகிறது சிரவை சற்குரு பதிகம். இந்நூல் 13 பாடல்களைக் கொண்டது. சுவாமிகள் தம்முடைய இளம் பருவத்திலேயே எழுதப்பெற்ற நூலாகக் கூறப்படுகிறது. இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 13 திவலை 11இல் வெளிவந்துள்ளது.

மகாலக்குமி பதிகம் : செம்பங்கத்தில் திருக்கோயில் கொண்டுள்ள மகாலக்குமிமீது தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் இளம் பருவத்தில் பாடப்பெற்றதே மகாலக்குமி பதிகம். 11 கட்டளைக் கலித்துறையாலான இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 13 திவலை 11இல் வெளிவந்துள்ளது.

சிரவை சற்குரு பதிகம் மற்றும் மகாலக்குமி பதிகம் ஆகிய இவ்விரு பதிகங்களும் ஈச்சநாரி அருள்மிகு விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி எனும் தனிநூலின் முற்பகுதியாக முறையே இடம்பெற்றுள்ளன.

கோவை இராமநாதபுரம் விநாயகர் பதிகம் : இந்நூல் கோவை மாநகரத்து இராமநாதபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான்மீது பாடிய 11 பாடல்களைக் கொண்ட சிரவையாதீனப் புலவர் ப. வெ. நாகராசன் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். இவ்வுரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 19 திவலை 2. 3 களில் வெளிவந்துள்ளது.

பேரூர் ஸ்ரீ அகிலாண்டநாயகி பதிகம் : திருப்பேரூர் தலத்தே வாழும் ஸ்ரீ அகிலாண்டநாயகியின் சிறப்பை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. காப்பு வெண்பா ஒன்றுடன் 11 எழுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களால் ஆனது இந்நூல். இதற்குப் ப. வெ நாகராசன் உரை எழுதியுள்ளார் இவ்வுரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 19. திவலை 3. 4 களில் வெளிவந்துள்ளது.

வெள்ளக்கிணறு வள்ளிநாயகன் பதிகம் : வெள்ளக்கிணறு என்னும் தலத்தில் வள்ளிநாயகி தெய்வயானையாரோடு கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானாகிய வள்ளிநாயகனின் பெருமைகளைப் பாடுவதாக இந்நூல் அமைந்துள்ளது. காப்பு வெண்பா ஒன்றுடன் 13 எழுசீர் ஆசிரிய விருத்தப் பாவாலான இந்நூலுக்குப் ப. வெ. நாகராசன் உரை எழுதியுள்ளார். இவ்வுரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 19 திவலை 5. 6களில் வெளிவந்துள்ளது.

காரமடை ஆண்டாள் பதிகம் : காரமடை என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ள ஆண்டாளின் பெருமைகளைப் பாடுவதாக இந்நூல் அமைந்துள்ளது. காப்பு வெண்பா ஒன்றுடன் 11 அறுசீர் ஆசிரிய விருத்தப் பாவாலானது இந்நூல். இதற்குப் ப.வெ. நாகராசன் உரை எழுதியிருக்கிறார். இவ்வுரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 19 திவலை 6.7களில் வெளிவந்துள்ளது.

342

காகிதச்சுவடி ஆய்வுகள்