உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கீரநத்தம் விநாயகர் பதிகம் : ஐந்து கைகளை உடையவரும் கீரநத்தத்தில் திருக்கோயில் கொண்டுள்ளவருமான விநாயகப் பெருமான்மீது பாடப்பெற்றது இந்நூல். காப்பு வெண்பா ஒன்றுடன் 13 எழுசீர் ஆசிரிய விருத்தப் பாவாலான இந்நூலிற்குப் ப. வெ. நாகராசன் உரை எழுதியுள்ளார். இவ்வுரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 19 திவலை 9-11களில் வெளிவந்துள்ளது.

கீரநத்தம் விநாயகர் திருப்புகழ் : மேற்படி விநாயகப் பெருமான்மீது பதிகம் மட்டும் பாடாமல் திருப்புகழும் பாடிப் பரவசம் கொண்டுள்ளார் தவத்திரு கந்தசாமி சுவாமிகள். இந்நூலுக்குப் ப. வெ. நாகராசன் உரை எழுதியுள்ளார். இவ்வுரையுடன் இந்நூல் மாதாந்திர அமுதத்தில் குடம் 19 திவலை 11. 12 களில் வெளிவந்துள்ளது.

2) தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பற்றிய நூல்கள்

தவத்திரு கந்தசாமி சுவாமிகளைப் பற்றி ஸ்ரீல ஸ்ரீ கந்தசாமி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று வண்ணம். ஸ்ரீல ஸ்ரீ கந்தசாமி சுவாமிகள் பிள்ளைத்தமிழ். தவத்திரு கந்தசாமி சுவாமிகள் மன்னைக் காஞ்சி ஆகிய நூல்கள் மாதாந்திர அமுதத்தில் வெளிவந்துள்ளன. அவற்றை இப்பகுதி ஆராய்கிறது.

அ) ஸ்ரீல ஸ்ரீ கந்தசாமி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று வண்ணம் : வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு வாழ்க்கை வரலாற்று வண்ணம் பாடிச் சிறப்புச் செய்தவர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள். இவருக்குத் தவத்திரு சுந்தர சுவாமிகள் வாழ்க்கை வரலாற்று வண்ணம் பாடிச் சிறப்புச் செய்துள்ளார். வண்ணம் பாடியவருக்கு வண்ணம் பாடியவராகத் திகழ்கின்றார் தவத்திரு சுந்தர சுவாமிகள். இந்நூல் தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாக் குருபூசை மலரில் (1951) வெளிவந்துள்ளது. என்றாலும் மாதாந்திர அமுதத்தில்

குடம் 13 திவலை 10இல் மீண்டும் வெளிவந்துள்ளது.

ஆ) ஸ்ரீல ஸ்ரீ கந்தசாமி சுவாமிகள் பிள்ளைத்தமிழ் : தவத்திரு கந்தசாமி சுவாமிகள்மீது சிரவையாதீனப் புலவர் கு. நடேசகவுண்டரால் பிள்ளைத்தமிழ் பாடப்பெற்றுள்ளது. பருவத்திற்கு ஏழு பாடல்கள் வீதம் இந்நூல் அமைந்துள்ளது. இதற்குத் தவத்திரு மருதாசலசாமி உரை எழுதியுள்ளார். மாதாந்திர அமுதத்தில் காப்புப் பருவம் ஏழு பாடல்களும் செங்கீரைப் பருவத்தில் 5 பாடல்களும் ஆகப் பன்னிரண்டு பாடல்கள் மட்டும் மூலமும் உரையுமாக வெளிவந்துள்ளது. மற்ற பகுதிகள் மாதாந்திர அமுதத்தில் வெளிவரவில்லை. இந்த 12 பாடல்கள் குடம் 13 திவலை 7, 8 களில் வெளிவந்துள்ளன.

இ) தவத்திரு

ந்தசாமி

சுவாமிகள் மன்னைக் காஞ்சி கு.நடேசகவுண்டரால் பாடப்பெற்றதே இந்நூல். 32 அடிகளைக் கொண்ட ஆசிரிய அடிகளால் ஆனது இது. மாதாந்திர அமுதத்தில் இந்நூல் குடம் 13 திவலை 10இல் வெளிவந்துள்ளது.

இவ்வாறு மாதாந்திர அமுதத்தில் இடம்பெற்ற தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் நூல்களைத் தொகுத்துக் காணலாம்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

343