உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுகள்

1. பருவ இதழ்களில் சுவடிப்பதிப்பு நூல்களை வெளியிட்டுத் தனக்கென ஓரிடத்தைப் பெற்றுள்ளது 'மாதாந்திர அமுதம்'.

2. கந்தசாமி சுவாமிகளின் நூல்கள் எல்லாம் ஒரே தொகுப்பாகக் கிடைத்தால் மேலாய்வுக்கு வழிவகுக்கும்.

3. கந்தசாமி சுவாமிகளின் பாடல்களில் காணக்கூடிய சொல்லமைப்பும் மொழியமைப்பும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. சங்க இலக்கியப் பாக்களுக்கு நிகராக இவர் பாடல்கள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றன. எனவே. இவரது பாடல்களின் மொழிநடையையும் சொல்லாட்சியையும் ஆய்வு செய்தால் புதிய பல நெறிகள் உருவாவதற்கு வாய்ப்பாக அமையும்.

344

காகிதச்சுவடி ஆய்வுகள்