உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொ. மணிவண்ணன்

தேர்வுநிலை விரிவுரையாளர் அரசர் கல்லூரி திருவையாறு

கம்பனின் கவித்திறன்

'கல்வியிற் பெரியவன் கம்பன்' படைத்த இராமகாதை மொழிபெயர்ப்பு நூலாயினும் முதல் நூலுக்குரிய தகுதியைப் பெற்றுத் தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகிறது.

அளப்பரிய குணச்சிறப்பிலும் தன் மனத்தைப் பறிகொடுத்ததனால் தமிழுக்குக் கிடைத்த தனிப்பெருஞ்செல்வமே கம்பராமாயணம். இறைவன் மனிதனாகத் தோன்றித் தன்னுடைய அரிய செயல்பாடுகளால் மாமனிதனாக உயர்ந்த நிலையை இராமன் வழி கண்டு கொண்ட கம்பர். அவனிடம் கொண்ட ஈடுபாட்டில் தமிழுலகம் பெற்ற பேரிலக்கியமே இராமாயணம். இதனால்தான் பாரதி. 'கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என்று போற்றிப் புகழ்ந்தார். இத்தகைய சிறப்புமிக்க கம்பராமாயணத்திற்குப் பன்னெடுங் காலமாகப் பலரும் உரையெழுதி இருக்கின்றனர். பல திறனாய்வு நூல்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் தோன்றிய ஆய்வு நூல்தான் 'கம்பன் கவித்திறன்' என்பதாகும். கம்பராமாயணத்தில் குறிக்கத்தக்க செய்யுட்களை எடுத்துக்கொண்டு அவற்றிற்கு நுட்பமாகப் பொருள் காணும் வழியாகக் கம்பன் படைப்பாற்றலை எடுத்துக் காட்டும் நோக்கில் பல கட்டுரைத் தொகுப்புக்களைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையிலிருந்து கீழ்த்திசையில் 12 கி மீ. தொலைவிலுள்ள இளங்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த தமிழறிஞர் சிங்காரவேல் சேதிராயர் ஆவார். அச்சில் வெளிவராமல் தாளில் எழுதப்பட்டு இருப்பது இவண் குறிப்பிடத்தகும்.

அளப்பரி வான்மீகி இராமாயணத்தைப் படித்த கம்பன். இராமன் ஆற்றலிலும்

இளங்காடு கிராமத்தில் தமிழ்ப்புலமை மிக்க சான்றோர்கள் பலர் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுதும் இவ்வூரில் பலர். தமிழாசிரியர்களாகத் திகழ்கின்றனர். இங்கு தமிழார்வம் மிக்க சான்றோர்களால் நிறுவப்பட்ட நற்றமிழ்ச் சங்கம் ஏறத்தாழ நூற்றாண்டுப் பழமை மிக்கதாக உள்ளது. இச்சங்க விழாவிற்கு வருகை தந்த தமிழ்த்தாத்தா உ வே. சாமிநாதய்யர். ஊரின் எல்லையிலிருந்து காலணி அணியாமலே நடந்து வந்ததாக ஒரு தகவலுண்டு. அதற்கு அவர் கூறிய காரணம். தமிழ் மணம் கமழும் இவ்வூரில் காலணி அணிந்து நடக்க மனம் ஒப்பவில்லை என்பதுதான். இத்தகைய சிறப்பிற்குரிய தமிழ் மண்ணில் தோன்றிய தமிழ்ப்பெருந்தகைதான் செ. சிங்காரவேல் சேதிராயர் இவர் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்து தகைமை சான்ற புலமையால் பலரது போற்றுதலுக்கும் உரியவராகத் திகழ்ந்தவர். கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் காகிதச்சுவடி ஆய்வுகள்

845