உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒருபொருளின் பண்பினை உணரும் ஒருவன். அப்பண்பினுக்கு முதலாகவுள்ள பொருளை நினையாதிருத்தல் கூடாதன்றே? அடுத்தது இராவணனுடைய வரமென்னும் பாற்கடலைச் சீதையெனும் பிறைகடையிட்டழிப்பதனை யான் அறியேன். ஆயின். அவனுடைய தவத்தின் பயனாகவுள்ள பெருமையையே நோக்கி நின்றேன் என்கின்றாள். அம்மண்டோதரி, ஈண்டும் மேற்கூறியாங்கு அவன் பெருமை நோக்கிய அவள் அவனை எண்ணாதிருந்தனள் என்பது பொருந்தாது. எனவே. மேற்காட்டிய ஈரிடத்தும் அவ்விராவணன்றன் ஆற்றலும் பெருமையும் நினைந்திருந்தனள் என்பது பெறப்படுதலின் அப்பண்புகளுக்கு முதற் பொருளாகவுள்ள தன் கணவனையும் நினைந்ததவளேயாகல் வேண்டும். ஆகலின். நினைந்ததும் மறந்ததுமிலாத நெஞ்சினுள்' என்பது தன் கணவனை மறத்தலின்றி நினைந்தே இருந்தனள் என்பது ஒருதலையாதல் உணர்க. அன்றி. அம்மண்டோதரி. ஒ தன்கணவன் குற்றங்களை நினையாதவள் எனவும், குணங்களை மறவாதாள் எனவும் கொள்வாரும் கொள்க.

இதுகாறும் இடம்பெற்றவை இளங்காடு செ.சிங்காரவேல் சேதிராயர். கம்பராமாயணப் பாடல்களுக்கு ஆய்ந்து எழுதிய உரைத்தொகுப்புகளில் ஒருசில சான்றுகளாகும். அவரது உரைத்திறனை உணர்த்தும் வகையில் உரைநடையில் மாற்றம் செய்யாமல் அப்படியே தரப்பட்டுள்ளது. சேதிராயரது கட்டுரைத் தொகுப்புகளை நுணுகி ஆராய்ந்தால் அவரது திறனாய்வுத் தகுதியை நன்கு அறியமுடியும். அதற்கு அன்னாரது உரைத்திறன் மிக்க கட்டுரைகள் அச்சு வடிவம் பெறுவது இன்றியமையாததாகும்.

350

காகிதச்சுவடி ஆய்வுகள்