உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுழைப்புலத்துடன் எடுத்துக்காட்டும் திறன் உணர்ந்து போற்றத்தக்கது.

அடுத்து இராவணன் மனைவி மண்டோதரியின் உணர்வினைக் கம்பர் நுட்பத்துடன் வெளிப்படுத்துவதைச் சேதிராயர் விளக்குகிறார்.

இராமனால் இராவணன் கொல்லப்பட்டான். இஃதுணர்ந்த அவ்விராவணன் மனைவி மண்டோதரி பெருந்துயர் கொண்டு போர்க்களம் புகுகின்றாள். புகுந்த அம்மண்டோதரி தன் கணவன்பால் எத்துணைப் பற்றுள்ளம் உடையவளாக இருந்தாள் என்பதனை உணர்த்தப் போந்த கம்பன்.

நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்"

(யுத்த. இரா. வதை. 228)

என்பதனால் குறிப்பிடுகின்றான். நினைப்பென்பதுள் வழி மறப்பிலாமையும். மறப்பென்பதுள்வழி நினைப்பிலாமையும் உள்ளத்துப் பொருந்துவன. "நினைந்ததும் நெஞ்சினுள்" என்றவழி இல்லாமை என்ற பொதுத் தன்மையில் நினைவும் மறதியும் சமநிலைப்பாற்படுவனவே. அங்ஙனமாக, மறதியின்மை காரணமாக எஞ்ஞான்றும் நினைவுண்மை நிலைபெறுதல் போல. நினைவின்மை காரணமாக எப்பொழுதும் மறதியுண்மை கோடலும் பொருந்துவதாகும். இவ்வாறிருக்க, மறதி உண்மை என்பதொன்றனை யொழித்து நினைவுண்மை மாத்திரை கோடல் பொருந்துவதாகாதே.

"உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் "

(குறள். 1125)

இக்குறளும். நினைத்தலும் மறத்தலுமிலாத நிலையினைக் கூறுவதே. அங்ஙனமாயின், 'நினைந்தது மறந்ததுமிலாத நெஞ்சினாள்' என்பதற் குரைத்தாங்கு ஈண்டும் உரைத்தல் கூடுமோ எனின்? கூடாது. ஏன்? இக்குறளில் 'மறப்பின்' என்னும் எச்சச்சொல் மறவாமையை உணர்த்தி நிற்றலின் மறதி உண்மை அழிந்தொழிய நினைவுண்மையே பெறப்படும். மறப்பின் உள்ளுவன் என்பது மறவாமையை உணர்த்துவதாயினும் அம்மறவாமையை வலியுறுத்தற் பொருட்டுப் பின்னர் மறப்பறியேன் என்றான் என்க. இக்கருத்து இக்குறளில் அமையுமாறு உணர்ந்து. பரிமேலழகர். ஒருபொழுதும் மறத்தலை அறியேன் ஆகலான் நினைத்தலையும் அறியேன்" என நுணுக்கம் கூறினார் என்க என்பதும் அறிதல் போல. "நினைந்ததும் மறந்ததுமிலாத நெஞ்சினாள்" என்றவிடத்து மறதி ஒழிந்து நினைவுண்மை கோடற்கிடனின்றே எனின்? தன் கணவன் இறந்தவுடன் அவற்கண்டு அவள் அரற்றிய. 'தேவர்க்கும்' எனத் தொடங்கும் செய்யுளில். "எவர்க்கும் வலியானுக் கென்றுண்டாம் இறுதியென ஏமாப்புற்றேன்" (இராவ. வதை 242) எனவும். 'அரைகடையிட்ட' எனத் தொடங்கப்பெறும் செய்யுளில், "அளப்பரி யவரமென்னும் பாற்கடலைச் சீதையெனும் பிறைகடையிட்டழிப்ப தனையறிந்தேனோ தவப்பயனின் பெருமை பார்ப்பேன்" (இரா. வதை. 243) எனவும் வரும் அடிகளுள். எவர்க்கும் வலியான்' என்பது அம்மண்டோதரி தன் கணவன் ஆற்றல்பற்றி எண்ணியிருந்த எண்ணம் கருதியது. ஆற்றல் பற்றிய அவ்வெண்ணம் அவனை நினையாது தனியே அவன் ஆற்றலை மாத்திரம் நினைந்திருந்தனள் என்பது பொருந்தாது. காகிதச்சுவடி ஆய்வுகள்