உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இராமனிடம். "இற்பிறப்பென்ப .

களிநடம்புரியக் கண்டேன்" என்கின்றான்

இங்கு அனுமனின் அறிவுத்திறன் கம்பரால் காட்டப்படும் முறையை விளக்கிய சேதிராயர். கம்பனின் மற்றொரு நுட்பமான படைப்புத்திறனை விளக்குகிறார்.

போர்க்களத்தில் இலக்குவனை எதிர்த்து இந்திரசித்து வீரவாதம்

நிகழ்த்துகின்றான்.

"முன்பிறந்த நின்தமையனை முறைதவிர்த்து உனக்குப் பின்பிறந்தவ னாக்குவென் பின் பிறந்தோயை முன்பிறந்தவ னாக்குவென் இது முடியேனேல் என்பிறந்தனாற் பய னிராவணற் கென்றான்"

(யுத்த. பிரமாத்தி. 63)

இந்திரசித்து, இலக்குவனை அழித்து இராமனையும் அழிப்பதாகக் கூறும் இப்பாடலின் நயம்பற்றிச் சேதிராயர் பின்வருமாறு விளக்குகின்றார்.

சாலவித்தைக்காரன் ஓர் கலத்தை எதிர்நிற்போரிடைக் காட்டி இதனுள் ஒன்றுமில்லை பாருங்கள்: இதனுள் சர்க்கரை வரச் சொல்கிறேன் என்று கூறி அக்கலத்தை அவர் எளிதில் உணராதவாறு அங்குமிங்கும் அசைத்தெடுத்துப் பின்பு சர்க்கரையைக் காட்டுகிறார். பின்னர்ச் சர்க்கரையை மணலாக்கிக் காட்டுகிறேன் என்று முற்கூறியவாறே செய்து மணலைக் 'காட்டுகின்றான். அதுபோலவே கம்பன்.' இலக்குவனுக்கு முன் பிறந்த இராமனை. அவனுக்குப்பின் பிறந்த தம்பியாகவும். இராமனுக்குப் பின்பிறந்த இலக்குவனை அவ்விராமனுக்கு முன்பிறந்த அண்ணனாகவும் காட்டி நம்மை மகிழச் செய்யும் சாலவித்தைக்காரனாக விளங்குகிறான்.

இந்திரசித்து வீரவாதம் செய்யும் பாடலில் 'முறைதவிர்ந்து' என்பதற்குப் பிறப்பு முறையை ஒழித்து என்பது பொருள். அஃது உனக்கு முன்பிறந்த இராமனை அண்ணன் முறையை ஒழித்துத் தம்பி முறையோனாகவும் அவற்குப் பின்பிறந்த இலக்குவனாகிய உன்னைத் தம்பி முறை ஒழித்து அண்ணன் முறையோனாகவும் செய்வேன் என்பதைக் குறிக்கும்.

மற்றொரு பொருள் - முன் பிறந்தவர் முன்னர் இறத்தலும் அவர் பின் பிறந்தவர் அவர்க்குப் பின் இறத்தலும் முறையாகும் என உலகம் பொதுவாகக் கருதுகின்றது. இப்போது. உலகம் கொள்ளும் அப்பொதுமுறையை ஒழித்து உனக்கு முன்பிறந்தோனாகிய இராமனை உனக்குப் பின் கொல்வேன்; இராமனுக்குப் பின் பிறந்தோனாகிய உன்னை உனக்கு முன் பிறந்தோனாகிய இராமனைக் கொல்வதற்கு முன் கொல்வேன் என்பதாகும். எனவே 'பின்பிறந்தவனாக்குவென்' என்பதனை, 'பின்பிறந்தவனாக்குவேன் எனவும் 'பின்பு இறந்தவனாக்குவேன்' எனவும். 'முன்பிறந்தவனாக்குவென்' என்பதனை முன்பிறந்தவனாக்குவேன் எனவும் முன்பு இறந்தவனாக்குவேன் எனவும் பிரித்தல் வேண்டும்.

இங்கு. 'பிறத்தல்' என்ற சொல்லை முன். பின் என்றும் சொற்களோடு இயைபுபடுத்திக் கம்பன் காட்டும் அற்புத நயத்தினைச் சேதிராயர் நுண்மாண் காகிதச்சுவடி ஆய்வுகள்

348