உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கல்லார் என்பதாயிற்று. அஃது உயர்திணைக்கும். அஃறிணைக்கும் உள்ள முரணைக் குறிப்பது. பெருமை. சிறுமைக்குரிய முரண் ஓரினஞ் சார்ந்தது. இஃது அற்றன்று எனவே கம்பர். 'கல்லாது நிற்பார் பிறர் இன்மையின்' என்று கூறிய நுட்பம் எண்ணி மகிழத்தக்கதாகும்.

இனி 'நிற்பார்' என்னும் சொல் இடம் பெற்றதுபற்றியும் சேதிராயர் கருத்துக் கூறுகிறார். செல்வம் என்பது தன்னை நன்னெறிப்படுத்துவார்க்கு இம்மை மறுமையில் நற்பயன் அளிக்கவல்லது. அவ்வாறு அதனை நன்னெறிப்படுத்துவதற்கு உதவுவது கல்வியறிவு: அவ்வறிவு இல்லார். செயற்குரியன செய்து அறமும் புகழும் பெறாது வறிதே காலங்கழிப்பர். அதனால் அவர் இயக்கமற்றவராகவே - மரமாகவே கருதப்படுவர். மேலும் நிற்றல் என்பது தொழிலொழிவு என்னும் பொருள் தருதலோடு மறைதல் (தொகுதல்) என்னும் பொருளிலும் வரும். பெருஞ்செல்வம் படைத்தோர் பலராலும் அறியப்படுதல் போலக் கல்வியாளரும் பலராலும் அறியப்படுவர். கல்வியிலார் அங்ஙனம் அறியப்படாமையின் 'நிற்பார்' என்று கம்பர் குறித்தார்.

ஈண்டு. நிற்பர். பிறர் என்ற சொற்களை இடம்பெறச் செய்த கம்பரின் நுட்பவுணர்வினைச் சேதிராயர் விளக்கும் நயம் எண்ணி மகிழத்தக்கது.

சொல்லின் செல்வனாகிய அனுமனது சொல்வன்மையினை நுட்பமாக எடுத்துரைக்கும் கம்பனின் படைப்புத்திறனைச் சேதிராயர் பின்வருமாறு விளக்குகின்றார்.

இலங்கையில் சீதை இருந்த நிலையை அனுமன் இராமனிடம் தெரிவிக்கிறான். அதற்குரிய பாடல்:

என்பதாகும்.

விற்பெருந் தடந்தோள்வீர வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கணடேனல்லேன் இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றுங் களிநடம் புரியக கண்டேன்

(சுந்தர. திருவடி, 62)

"மரத்தில் மறைந்தது மாமத யானை யரத்தை மறைத்தது மாமத யானை

என்றனர் சான்றோர்.

வினைவலான் செய்த மரத்தினான் இயன்ற யானை ஒன்று; அது பார்ப்பார் உள்ளத்து யானை என்று உணர்தற்கேற்ப வடிவமைக்கப் பெற்றது. பயான்றான்றிப் புதிதாகக் காண்போர் உண்மை யானை என்றே உணர்வர். அதன் உண்மை யுணர்ந்தோர் அஃது உண்மை யானையன்று: மரத்தினானியன்றது என அவர்க்கு எடுத்துக்காட்டியவழி முன்னர் உண்மை யானை என உணர்ந்தார். ஐயன்மீர் யாங்கள் அதனை மரம் என நினைத்திலேம். உண்மை யானையென்றே நினைத்தோம் என்பர். அதுபோலவே சீதையைக் கண்ட அனுமன் அவள் பெண் வடிவு காணானாய். அப்பெண் வடிவில் மிக்குத் தோன்றிய கற்பினியல்பு. பொறுமையின் தன்மை. இற்பிறப்பின் பண்பு ஆகிய இவற்றையே உணர்கின்றான். இதனையே அவ்வனுமன் காகிதச்சுவடி ஆய்வுகள்

347