உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திகழ்ந்த இவர் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தவர். மகாபாரதம். இராமாயணம். கந்தபுராணம், திருவிளையாடல் புராணம். வில்லிபாரதம். பெரிய்புராணம். அடியார் வரலாறுகள். திவ்வியப் பிரபந்தம் எனப் பல தலைப்புகளில் தொடர்ச்சியாகப் பல நாள்களுக்குத் தென்னகம் முழுவதும் பொழிவுகளைச் செய்துள்ளார். இத்தகைய நிகழ்ச்சிகளில் அவ்வப்பொழுது நிகழ்ச்சிக்கு ஏற்றவண்ணம் விருத்தப் பாக்களையும், இசைப்பாக்களையும் உருவாக்கி. இராக. தாளம் அமைத்துப் பாடுவது இவருக்கே உரியதாகும்.

எழுத்தாற்றல்

கவியாற்றலும். சொல்லாற்றலும். இசையாற்றலும் ஒருங்கிணைந்த இவர் எழுத்தாற்றலும் கொண்டவர். தம் நிகழ்ச்சிகள் அத்தனையையும் தம் கைப்படத் தாள்களில் எழுதி வைத்துள்ளார். சித்தாந்தம். வேதாந்தம் இவைகளில் தெளிவான கருத்துடைய இவர் பல மாணாக்கர்களுக்கு இவற்றைப் பாடமாகவும் நடத்தியுள்ளார். அதற்கான குறிப்புகளையும் எழுதி வைத்துள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தன்னை அதில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட இவர் மிக எளிமையாகவே வாழ்ந்தவர். சென்னை பெரம்பூரில் காந்தி நினைவில்லத்தில் தேவாரப் பாடசாலையை நடத்தியுள்ளார். காஞ்சிபுரத்திலும் திருவொற்றியூரிலும் தங்கியிருந்து பல தமிழறிஞர்களுடன் மொழி ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். ந. மு. வேங்கடசாமி நாட்டார். கி. வா. ஜகன்னாதன், மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை. வித்யானந்தகிரி சுவாமிகள், குக ஸ்ரீ கண்ணன் அடிகள் போன்றோர் தணிகைவேள் பாரதியாரின் பேரன்பர்களுள் சிலராவர்.

பட்டங்கள்

இவர் பல சமயங்களில் பலரால் பல பட்டங்கள் பெற்றுள்ளார். கி. பி. 1929இல் பரங்கிமலையடுத்த நந்தம்பாக்கத்தில் நடந்த கலித்தொகை மாநாட்டில் தலைமை வகித்த காசிவாசி யதீந்திர சுவாமிகள் இவருக்கு அளித்த பட்டம் 'பாரதி' என்பதாகும்.

1939இல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இவர் சைவ, வைணவச் சொற்பொழிவுகள் ஆற்றியபோது. சைவ வைணவப் பெரியார்கள் கூடி அளித்த பட்டம் ‘இருசமய நம்பி என்பதாகும்

இவ்வாறே. முத்தமிழ்த்துறைவாழ் அருட்கவி. வித்தியாசாகரர், வண்ணப்புலவர். நாற்கவிப் புலவர். கவிஞர்சிகாமணி. இருமொழிப்புலவர். செந்நாப்புலவர், முத்தமிழ் நம்பி. தொண்டைமான் நம்பி. வியாச நம்பி. முருகருட் பெருங்கவிக்கோ. திவ்வியப்பிரபந்த மாமணி எனப் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். இவைதவிர. இவருடைய மாணாக்கர்கள் இவரைப் பணிவன்போடு 'தகைவேள்' என்றே அழைப்பர் என்ற இவர்தம் மாணாக்கர் சு. த. இட்டலிங்கம் பிள்ளை ஒரு தனித்தாளில் குறித்துள்ளார்.

உரைகளும் குறிப்புகளும்

352

திருப்புகழ் சதுரர் சே. தா. இராமலிங்கம் பிள்ளை இவருடைய பாடல்களுக்கு காகிதச்சுவடி ஆய்வுகள்