உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுதிய உரைகளும் காகிதச் சுவடிகளாகக் கிடைக்கின்றன. பாரதியார் சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சிகளில் இவருடைய இளவல் கண்ணப்பரும் பிற மாணாக்கர்களும் 'கையேடு' வாசித்ததாகக் குறிப்புகள் கிடைக்கின்றன அதற்காகவும் இவர் குறிப்புரைகளைத் தாள்களில் எழுதி வைத்துள்ளார்.

இவருடைய நிகழ்ச்சிகளில் பல அன்பர்கள் கேட்டவுடனேயே பாடிய ஆசு கவிகள் பலவற்றை ஆண்டு. மாதம். நாள் குறிப்புகளுடன் எழுதி வைத்துள்ளார். அவை சிலேடை. யமகம், சித்திரகவி எனப் பலவகையில் உள்ளன. இவரிடம் 'பாரதி என்ற பட்டத்தின் தகைமைப்பற்றி ஓர் அன்பர் கேட்டவுடன்.

"கலைவாணி யாற்றலுங் காசற்ற பேச்சுங் கலைவாணர் மெச்சுங் கவிதை -அலையாத வாரமும் கேட்ட வகையே பாடுவோன் பாரதியா மென்றே பகர்'

என்று பாடியுள்ளார். இதுவே இவர்தம் கவியாற்றலுக்குச் சான்றாகும்.

பாரதியாரின் இலக்கிய நயங்களை விரிப்பின் பெருகும். அவை தனி ஆய்வுக்குரியதாகும். எனவே. அவர்தம் கையெழுத்துச் சுவடிகளைப்பற்றி மட்டும் இப்பகுதி ஆராய்கிறது.

கையெழுத்துப் பிரதிகளின் சீர்மை

சொற்பொழிவுக்காகவும், பாடம் சொல்லவும். பிற நிகழ்ச்சிகளுக்காகவும் கையெழுத்துப் பிரதிகளை எழுதி வைத்த இவர் அவையனைத்திலும் ஒரு சீர்மையைக் கொண்டுள்ளார். முழு வெள்ளைத்தாளிலும். நோட்டுப் புத்தகங்களிலும் எழுதியுள்ளார். தனி நூல் படைப்புக்களை எழுதும்பொழுது. அவை அச்சில் எவ்வாறு அமைய வேண்டுமென அவர் விரும்பினாரோ அவ்வண்ணமே எழுதி வைத்துள்ளார். முதலில் நூற்பெயர். நூலாசிரியர் பெயர் (பட்டங்களுடன்). எழுதிய ஆண்டு. மாதம். எழுதுவித்தோர் விவரம், நூற்பயன் ஆகியவற்றையும் குறித்துள்ளார்.

காலத்தைக் குறிப்பிடும்போது, தவறாமல் கலியுக ஆண்டையே எழுதுகிறார். ஆங்கில ஆண்டைச் (கிறித்துவ ஆண்டு) சில இடங்களிலேயே குறிப்பிடுகிறார். பாடல் எண்களைத் தமிழ் எண்களிலேயே எழுதியுள்ளார். முன்னுரையில் நூல் எழுதிய வரலாற்றையும் குறிக்கிறார். இவர் தரும் காலக்குறிப்புகள் பல ஆய்வுக்குத் துணைபுரிவன. ஓவ்வொரு காகிதச் சுவடியிலும் இவர் 'தி. வெ. தணிகைவேள் பாரதியார்'. 'சுவாமி த. வே. பாரதியார்" என இவ்வாறு கையொப்பமிட்டுள்ளார். தாம் அவ்வப்போது தங்கியிருந்து எழுதிய முகவரிகளையும் இவர் அங்கங்கே குறித்துள்ளார். பின்னாளில் அச்சில் வரும்பொழுது இவை உதவியாகும் என எண்ணியே அவர் இவ்வாறு எழுதியிருத்தல் வேண்டும்.

படைப்பும் அச்சும்

இவருடைய படைப்புகள் பற்றிய பட்டியல் இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் சில ஏடுகளே அச்சில் வெளிவந்துள்ளன. பல இன்னும் காகிதச் சுவடிகளாகவே உள்ளன. சேக்கிழார் நூற்றந்தாதி, வறுமைக்கு விடை காகிதச்சுவடி ஆய்வுகள்

353