உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




லை

கொடுத்த வெண்பா ஆகிய நூல்களை இக்கட்டுரையாளர் அச்சில் பதிப்பித்துள்ளார். பிற இன்னும் அச்சிடப் பெறவேண்டும்.

ஆய்வுக் குறிப்புகள்

சுமார் அறுபது ஆண்டுகட்கு முன்னர். திருவரங்கம் திருக்கோயில் கருவறையில் தீ விபத்து நேர்ந்தமை இன்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அன்று நடந்த அத் தீச்செயலைக் கண்டு வருந்திய இந்நூலாசிரியர் அரங்கநாதரின் சீற்றத்தாலேயே இது நிகழ்ந்தது என்று கூறிச் 'சீரங்கநாதன் சீற்றந்தணி மாலை' என்னும் தனி நூலைப் பாடியுள்ளார். இது. இக்கோயில் வரலாற்றில் இடம்பெறும் ஓர் இலக்கியமாகும்.

ஓரு தனி ஏட்டில், 32 இராமாயணங்கள் பெயரும் அவை ஒவ்வொன்றிலு முள்ள பாடல் எண்ணிக்கைகளைத் தனித்தனியே குறித்துள்ளார்.

"இதுவல்லாமலும் நாமாவளியாக, சிந்தாக, குறமாக பலவிதமாகவும் இராமாயணங்கள் நிலவி இருக்கின்றன"

என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறே 19 பாரதங்களின் பெயரும் அவை ஒவ்வொன்றிலுமுள்ள பாடல் எண்ணிக்கைகளையும் தனித்தனியே குறித்துள்ளார்.

"இதுவல்லாமல் நாமாவளியாக, சிந்தாக. குறமாக, பலவிதமாகவும் மகாபாரதங்கள் நிலவி இருக்கின்றன என்பதைப் பணிவோடும் வணக்கத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சேர வேண்டியதிருப்பின் புலவர் பெருமான்கள் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்"

என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ஆய்வுக் குறிப்புகள். பிற்காலப் பதிப்பு உருவாக்கங்களுக்கு எவ்வளவு உறுதுணையாகும் என்பதைப் பதிப்பறிஞர்கள் நன்கறிவர். மக்கள் தந்த வரவேற்பு

சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு பல ஊர்களிலிருந்தும் பலரும் இவரைச் சொற்பொழிவாற்ற அழைத்து மகிழ்ந்துள்ளனர்.

என்றும்.

"பெரியாழ்வார் அருளிச்செய்த 'மரவடியை' பாசுரங்கள் 10ம் வியாக்யானம் செய்யவும்"

"ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பாசுரம் 'இருளிரியச் சுடர்மணிகள்' பாசுரங்கள் வியாக்கியானம் செய்யவும்"

என்றும் இவ்வாறு அந்நாளில் பணவிடைக் கூப்பனிலேயே (Money Order)

354

காகிதச்சுவடி ஆய்வுகள்