உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




F

சொற்பொழிவுத் தலைப்புகளைக் கேட்டு எழுதிப் பலரும் முன்பணம் அனுப்பியுள்ளமைக்குச் சான்றுகள் பல கிடைக்கின்றன. அவர் காலத்தில் இவருடைய புலமைக்கும் எழுத்துகளுக்கும் பொதுமக்கள் அளித்த வரவேற்பு எத்தகையது என்பது இவற்றால் புலனாகின்றன.

முன்னுரை தரும் விளக்கங்கள்

இவர்தம் நூல்களுக்கு எழுதியுள்ள முன்னுரைகளின் சிறப்புகள் பல குறிப்பிடத்தக்கன. காட்டாக. 'தாமரையும் சைவலமும்' என்ற நூலின் கையெழுத்துப் பிரதியிலுள்ள முன்னுரையை இவண் காணலாம்.

முன்னுரை

"அன்பர்களே உலகியலை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள தாமரையும் சைவலமும் ஒன்றுக்கொன்று வினாவிடையெனப் பேசுவதாக. உண்மை நிறைந்த கருத்தோவியத்தை நன்றாகப் படித்து அதன்மூலம், மக்கள் உண்மைகளைத் தெரிந்து அந்த வழியைக் கைப்பற்றுவார்களாயின், பற்றாக்குறை. பலவீனம். பலநோய்கள். வாழ்க்கையில் சங்கடம், மனநிம்மதியில்லாமை. பயம், பல துன்பங்களில்லாமல் வாழலாம். இதனால், பழமையும் புதுமையின் பாகுபாடுகளும் நன்கு புலனாகும்".

த.வே.பாரதியார்

முக்கிய கவனிப்பு

“தமிழ் எண்கள்

கஉசருசுஎஅகூ க0 க00 க000 பிறமொழி எண்கள் : 1 2 4 5 6 7 8 9 10 100 1000

இதுசம்பந்தமாக எழுதுவதெல்லாம் தமிழ் மொழியிலேதான் எழுத வேண்டும். பிறமொழியில் வருவதை விலக்கப்படும்.

நம் பெரியோர்கள் நடத்தி வந்த பண்பாடுகள் முற்றிலும் மாறியபடியாலும், இதுதான் உண்மை என்று நடந்து வருவதாலும் ஏற்பட்ட நன்மை தீமைகளை விளக்கஞ் செய்யவே தொன்மயம் தோன்றியிருக்கின்றது. அந்தத் தொன்மயத்தின் ஆசிரியர்தான். தாமரையும் சைவலமும் பேசுவதாகக் கற்பனைச் சித்திரத்தில் உண்மையைப் புகுத்தித் தாமரையும் சைவலமும் என்ற நூலை வெளியிட்டுள்ளேன். தமிழகம் பயன்பெற நீங்கள் யாவரும் நலமுடன் உதவி செய்வீர்களாக.

இந்த நூல், நம் நாடு நலமுடன் வாழவே எது எது நன்மையோ? எது எது தீமையோ? இவைகளைத் தாமரையும் சைவலமும் பேசுவதாக ஒரு கற்பனைச் சித்திரமாக உண்மைகளத்தனையும் விளக்கியிருக்கின்றேன்.

இதை பூராவாகப் படித்து. இந்நூலை வெகுபத்திரமாக வைத்துக் காகிதச்சுவடி ஆய்வுகள்

355