உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கொள்ள வேண்டும். விஞ்ஞானத்தால் ஏற்படும் சிறு நன்மையும். பெருந்தீதுகளை இந்நூலில் விளக்கமாகக் கூறி இருக்கின்றேன். இதை ஒவ்வொரு இல்லத்தவர்களும் வாங்கிப் படித்து விஞ்ஞானத்தை ஓரளவு வரையிலும் பயன்படுத்திக் கொண்டு தொன்மயத்தில் நம் பெரியோர்கள் எப்படி நலமுற வாழ்ந்தார்களோ அதைப் போல வாழ்வீர்களாக".

சுவாமி த.

வே. பாரதியார்

என இவ்வாறு எழுதி வைத்துள்ளார்

இக்குறிப்புகளிலிருந்து. அவருடைய தமிழ் ஆர்வம். அன்றைய மொழிநிலை, சமூகநிலை, இவருடைய சீர்திருத்த எண்ணங்கள். பொதுநல நோக்கு எனப் பலவற்றை ஆராயலாம்.

இவர்தம் பாடல்கள் தெய்வீகமானவை என்பதை அங்கங்கே குறித்துள்ளார்.

"சகல துன்பங்களும் நீங்கி. சகல நன்மைகளும் பெறுவர். தினப்படி பாராயணஞ் செய்யவும்” (சென்னை, திருவொற்றியூர் இறைவன் இரட்டைமணிமாலை - காகிதச்சுவடி) (திருமயிலம் முருகன் பஞ்சரத்ன வண்ணம் - இரட்டை மணிமாலை) என இவ்வாறு பலவிடங்களில் குறித்துள்ளார்.

இவர், 'சர்வ தோஷ நிவாரண, சகல ஐஸ்வரிய அநுகூல மந்திரம்' என்ற தலைப்பில் 13 மந்திரங்களை உச்சரிக்க வேண்டிய வழிமுறைகளை ஒரு காகிதச்சுவடியில் குறித்துள்ளார். வடசொற்களாலான இம்மந்திரங்களைச் சொல்லுமுன்,

"அருளாகி, ஆனந்தமாகி. இகநலமாகி ஈடில்லா வளமாகி. உரிய நலமாகி, ஊக்கமுமாகி. எழிலாகி, ஏராகி, ஐயமற்றதாகி. ஒப்பற்றதாகி, ஓங்குவ நலனாகி, ஔவியமகலக் கருணையுமாகி விளங்கியருள் செய்யும் பார்வதி பரமனுமாகிய இறைவா"

என்று கூறவேண்டும். பின்பே மந்திரங்களை ஐந்துமுறை உச்சரிக்க வேண்டும் என்கிறார். இதில் அவர்தம் தமிழ்ப்பற்று - அகரவரிசையில் கூறும் பாங்கில் புலனாகின்றது.

-

பதிப்பு முயற்சிகளும் பொருள் தேடலும்

இவர் அவ்வப்போது இயற்றிய தனிப்பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து 1960இல் 'தனிப்பா மலர்' என நான்கு பக்கங்களில் தனி நூலாக அச்சிட்டுள்ளார். இதன் விலை இரண்டு அணா. இதில். சித்தனூர் செங்கல்வராயப் பிள்ளை, சாரனூர் இஷ்டலிங்கப் பிள்ளை ஆகியோர் அளித்த சாற்றுகளிலும் இடம்பெற்றுள்ளன. இதன் இரண்டாம் பக்கத்தில் 'தொட்டனைத்தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு என்னும் குறளை அமைத்து. அதன் கீழே காப்பாக.

356

காகிதச்சுவடி ஆய்வுகள்